Friday, June 7, 2013

போரின் மறைமுக உண்மைகள்

தமிழீழ விடுதலை புலிகள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, பல இளம் தமிழ் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மனதில் விஷமூட்டி நாட்டை அச்சுறுத்தும் பயங்கரவாத இலக்குகளுக்காக அவர்களை பயன்படுத்திவந்தனர். இளம் ஜெயவதனியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவள் அனாதைச் சிறுமிகள் இல்லமான செஞ்சோலையில் வசிக்க நேர்தமையால் விடுதலை புலிகளுக்கு மிக சுலபமாக பிரச்சாரங்களூடாக அவள் மனதை விஷமூட்ட முடிந்தது.

ஜெயவதனிக்கு ஒரு தாயின் அன்பான அரவணைப்பை பெறும் அதிஷ்டம் கிட்டவில்லை. அவள், பெற்றோர்களை இழக்காமல் இருந்திருந்தால் ஒரு குடும்பமாக வாழும் வாழ்க்கையும், வாழ்க்கை ஒரு கனவாக மட்டுமாகவே இருந்திருக்காது.

அவள் எப்போழுதும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டால். ஆனால் அவளின் நிஜ வாழ்க்கை அவ்வாறு அமையவில்லை. ஆதரவற்ற அனாதைகளுக்காக புலிகளால் பராமரிக்கப்பட்ட செஞ்சோலையே அவள் அறிந்த ஒரே குடும்பமாகும். அவள் கல்வி கற்ற அவ் இல்லத்துக்கு, மிகுந்த கடமைப்பாடுடையவளாகவும் அவள் திகழ்ந்தாள்.

விஷமூட்டப்பட்ட உள்ளம்.

அவளுக்கு, தங்க இடம் கொடுத்து கல்வியும் வழங்கிய புலிகளுக்கு அவள் நன்றி உணர்வுடையவளாக இருந்தாள். இலங்கை இராணுவம் மற்றும் சிங்களம் மக்கள் கொடுமையானவர்கள் என்றும் நம்பத்தகாதவர்கள் என்றும் ஜெயவதனி விஷமூட்டி வளர்க்கப்பட்டாள். தமிழர்களை அழிக்கவே அவர்கள் செயற்படுவதாகவும் விஷமான கருத்துக்கள் அவள் மனதில் விதைக்கப்பட்டன. இவ்வாரான வெறுப்புக்களே பிற்காலத்தில் பயங்கரவாத்த்தில் இணைந்து செயற்பட வழிவகுத்தது.

"நான் அறிந்த ஒரே குடும்பம் இல்லத்தில் இருந்த சக அனாதைகள். அத்துடன் புலிகள் எம் மக்களை விடுவிக்க போராடிய ஹீரோக்கள் என்றும் அனாதை இல்லத்தில் எங்களுக்கு அக்கறைகாட்டியவரே நான் அறிந்த ஒரே அம்மா" என்றும் அவள் நினைவு கூர்ந்தாள்.

அவள் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து, அரச படைகளுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடினாள். “நான் என் வாழ்வில், அனாதை குழந்தைகள் மற்றும் என்போன்ற சக போராளிகளை தவிர வேறு எவருடனும் பழகியிருக்கவில்லை. அரச படைகள் குறிப்பாக இராணுவம் நம்மை கொல்வதற்காக செயற்படுவதாகவும் அவர்கள் கொடூரமான கொலையாளிகள் என்றும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம்” என அவள் குறிப்பிடுகின்றாள்.


ஜெயவதனியைப் போலவே ஏனைய பல போராளிகளும் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு தவறான கருத்துக்களுடன் புலிகளியக்கத்துக்கு இணைக்கப்பட்டுருந்தனர். ஜயவதனி போன்றே, ஏனையவர்களும் கொலையாளிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் மாறியதற்கான கதைகளை தம்முள் சுமந்துள்ளனர்.

அவள் பிற்காலத்தில் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருந்த, தன்னைவிட மூத்த போராளியான சிதம்பரநாதன் நாகநாதன் என்பவரை சந்திக்க நேர்ந்தது அவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் மலர்ந்தது. பல தடங்கல்களுக்கு மத்தியில்,  திருமணத்துக்கு பின்னரும் இயக்கத்துக்காக தமது பங்களிப்பை வழங்கும் ஒப்பந்தத்தில் இருவரும் திருமணம் செய்து முரசுமோட்டையில் குடியமர்ந்தனர். அவ்வாறே திருமணத்தின் பின்னரும் இயக்கதுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

புலிகளின் கொடுமைகளை உணர்தல்

காலம் நகர்ந்தது, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர் அத்துடன் ஜெயவதனி மூன்றாவது மகனை கருத்தரித்திருந்தாள். பயங்கரவாதிகள் மீது நம்பிக்கை கொண்ட ஏனையவர்களைப் போலவே, பயங்கரவாதத்துவமானது அவர்களுள் ஆழமாகப் பதிந்திருந்ததுடன் அவர்களது தலைமை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களுள் தனி ஈழம் என்ற கனவு ஊறியிருந்ததுடன், தலைவர்கள் முற்று முழுதாக அவர்களுக்காக பாடுபடுவதாகவும், எந் நேரமும் துன்பங்களில் இருந்து பாதுகாக்கவே செயற்படுவதாகவும் எண்ணியிருந்தனர்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் கடைசித் தறுவாயில், அவர்களது உயரதிகாரிகளினதும் தலைவர்களினதும் கடுமையான செயற்பாடுகள் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு தமது குழந்தைகளையும் குடும்பத்தினரையும் இயக்கத்தின் சம்மதத்துடன் அனுப்ப முயன்றனர். ஆனால் அவர்களது இயக்கம் தமது சொந்த இனத்தை நோக்கியே செல்களை எறிந்தன. தமது இனத்துக்காகவே செயற்படுவதாக கூறியவர்கள், அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக்காக அவர்களது மக்களையும் அழிக்கத் தொடங்கினர்

சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் தம்முடன் போராடி ஊனமுற்ற ஆண், பெண் போராளிகளுக்குக் கூட அவர்கள் வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அவர்களை உயிருடன் வாகனங்களில் ஏற்றி வெடிக்கச் செய்தனர். என நாகநாதன் நினைவு கூர்ந்தார்.


இராணுவம் எக்காரணம் கொண்டும் மனிதாபிமானமற்ற முறையில் யுத்த முனையில் அப்பாவிகளை கொல்லவில்லை. யுத்தத்தின் கடைசி கட்டத்தில், இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வருமாறு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்தனர். ஆனால் புலிகளின் பிடியில் இருந்து இராணுவத்தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவித் தமிழ் மக்களை இந்தக் கொடிய பயங்கரவாதிகளே சுட்டுக் கொன்றனர். என ஜெயவதனி நினைவு கூர்ந்தார்

மனித கேடயம்

மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 300,000க்கும் அதிகமான தமிழ்மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் மனித கேடயங்களாக துப்பாக்கி முனையில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இக்காலப்பகுதியில் ஜெயவதனி தனது மூன்றாவது மகனை ஈன்றெடுத்தாள். புலிகளியக்கத்தின் அனுபவம் வாய்ந்த ஒருவராக மட்டும் ஜெயவதனி இருக்கவில்லை. அவ்வியக்கத்தின் விடுதலைப் போராளியாக பல வருடங்கள் இருந்துள்ளார். ஆயினும் அரண்களுக்கு அப்பாலுள்ள உண்மையான சுதந்திரத்தை ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ந்தபோது அவளுக்கு அந்த சுதந்திரம் தேவைப்பட்டது. ஆனால் தமிழர்களின் சுதந்திரத்துக்காக போராடுவதாக செயற்பட்ட புலிகள் அதை மறுத்தனர்.

என் மனைவியும் பிறந்து ஏழு நாளேயான பிள்ளையும் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்காக மண் அரணை நெருங்கும் போது புலிகளே செல் எறிந்தனர். என் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டதாக நினைத்து நான் மற்ற இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு இராணுவகட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டேன். ஆனால் இராணுவத்தினரின் மகத்துவமான செயற்பாடுகாரணமாக ஜெயவதனியும் குழந்தையும் உயிர்பிழைத்தனர். அவர்களை காப்பாற்ற இராணுவத்தினரும் மருத்துவர்களும் கடுமையாக பாடுபட்டனர். என்று நாகநாதன் நினைவு கூர்ந்தார்.

புலிகளின் ஆதரவாளர்கள் அறிந்திராத உண்மைகளை இவர்களது கதை விளக்குகின்றது. ஜெயவதனி தனது சுய அனுபவம் மூலம் இவற்றை விபரிக்கின்றாள். ஒரு போராளியாக தனது மனச்சாட்சியினுள் இறக்கின்றாள். தற்போது மீண்டும் உயிர்பெற்று நாட்டுக்காக செயற்படுவது அவளுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அவள், வேதனை மிகுந்த கடந்த காலத்தைக் கொண்டிருந்தாலும் இன்று அன்பான தாயாகவும், மனைவியுமாக இருக்கிறாள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com