எல்.ரி.ரி.யின் அரசியற்துறை மகளிர் பிரிவின் முன்னாள் தலைவி தமிழினி விடுதலை!
எல்.ரி.ரி.யின் அரசியற்துறை மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி என அழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி ஒரு வருடகால புனர்வாழ்வின் பின்னர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டி யாராச்சி தெரிவித்தார்.
இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என என்று புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எல்.ரி.ரியின் முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழினியை பொறுப்பேற்பதற்காக அவரின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
1 comments :
இந்த கொலைகாரியை சும்மா விடக்கூடாது , இவளால் பாதிக்க பட்டவர்களும், கொலை செய்யபட்டவர்களின் குடும்பத்தாரும் இவளை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கணும் , அவமானப் படுத்த வேண்டும், இனி இவள் இவளுடைய அப்பனுடன் சேர்ந்து கசிப்பு காச்சத்தான் முடியும் , அல்லது அப்படிப்பட்ட தொழில் தான் செய்ய முடியும், இவளை எல்லாம் பெண் என்றே சொல்ல கூடாது.
Post a Comment