நல்லிணக்க முயற்ச்சிகளை புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் தடுக்கின்றனர்! - ரவினாத்
நாட்டின் நல்லிணக்க முயற்ச்சிகளை புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் தடுத்து வருகின்றார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் "புலம் பெயர் மக்களும் அபிவிருத்தியும்" என்ற தொனிப்பொருளில் உரையாற்றியபோதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளில் இலங்கையைச் சேர்ந்த மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும், புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்
மேலும் புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க நடவடிக்கைகளை சீர் குலைப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர் எனவும், இவர்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித் துள்ளார்.
0 comments :
Post a Comment