விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் உள்நாட்டில் இடம்பெயர்தோருக்கு மாத்திரமே! வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அல்ல!
வெளிநாடுகளில் அகதிகளாக் குடியிருப்பவர்களும், வெளி நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பவர்களும், வாக் காளர் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டத்திற்கிணங்க தங்களை உள்நாட்டில் வாக்காளர்களாக பதிவு செய்ய முடியாது எனவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டிற்காக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்பாக குறை நிரப்பு வாக்காளர் இடாப்பொன்றை தயாரிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 22 ஆம் திகதி கிராமசேவர்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் ஜுன் மாதம் 28 பொறுப்பேற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தல் இடாப்பில் தங்களை பதிவு செய்துக்கொள்ளவேண்டுமாயின் அவர்கள் இலங்கை பிரஜையாக இருக்கவேண்டும் எனவும், வெளிநாடுகளில் தங்கியிருப்போர் வாக்காளர்களாக பதிவுசெய்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த திருத்த சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவதுடன், நாட்டிலிருந்து இடம்பெயர்ந்த அகதிகளும், அரசியல் தஞ்சம் கோரியிருப்போரும் இந்த திருத்தச்சட்டத்தின் ஊடாக பதியப்படமாட்டார்கள் என்றும், வெளிநாட்டிலுள்ளோர் இலங்கை கடவுச்சீட்டை வைத்திருந்தால் அவர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்துக்கொள்ளப்படுவார்கள் எனவும், அவ்வாறு தங்களை வாக்காளர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமாயின் அவர்கள் கட்டாயமாக நாட்டுக்கு வருகைதரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment