பணமோசடியில் ஈடுபட்ட யாழ் வங்கி ஊழியர் ! குறித்த நபரை தேடி பொலிஸார் வலைவிரிப்பு
கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து 46 இலட்சம் ரூபாவை பணமோசடி செய்த யாழ் வங்கியென்றின் ஊழியரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக, யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
தலைமறைவாகி யுள்ள குறித்த நபரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நபர் வங்கியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment