Thursday, June 6, 2013

ஆப்பிழுத்து மாட்டிய புலிக்கொடி தளபதி! – அருள் அம்பலம்.

லண்டன் புலிக்கொடி வீரர்களுக்கு பிரிசித்தி பெற்ற இடம். தமிழ் தேசிய ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் ஆளை விட்டால் காணும் என்று திறந்த விசாவிலும், கள்ள விசாவிலும், விசாவே இல்லாது கையை உயர்த்தி வந்த கோழைகள் பலர்தான் இன்று லண்டனில் புலிக்கொடி வீரர்களாக மாறியுள்ளனர். வந்த புதிதில் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் திட்டித் தீர்த்த இந்த பெருந்தகைகளே, இன்று புலிகள் அழிந்த பின்னரும் புலிகளின் தலைவர் எங்களிடம் போராட்டத்தை தந்து விட்டு போய்விட்டார், நாங்களே இனி தமிழ் தேசியத்தை காக்கும் தூண்கள், தமிழீழத்தை பெறாது நாங்கள் தூங்க மாட்டோம் என்று கூச்சலிட்டபடி, தங்கள் பெரும் ஆயுதமாக புலிக்கொடியை தூக்கியபடி, பகுதி நேர போராளிகளாக இவர்கள் மாறியுள்ளனர். ஆனையிறவு முகாமை புலிகள் வெற்றி கொண்ட பின்னர் புலிகள் பக்கம் தாவிய இந்த புலிக்கொடி வீரர்கள் கல்யாணம், கருமாதி, சாமத்தியவீடு, ஊர் விழா, உலக்கை விழா தவிர்ந்த ஏனைய தமது வெட்டியான நேரத்தில் மட்டும் புலிக்கொடி ஏந்தி ஊர்வலங்களுக்கு போவதே இவர்களின் பொழுது போக்கு புலிக்கொடி போராட்டம்.

இந்த போராட்த்தில் தொண்டை கிழிய கத்துவதற்காக மட்டும் சில ஆங்கில வார்த்தைகளை தெளிவாக படித்து டிப்பிளமோவும் எடுத்துள்ளனனர். 'அவர் லீடர் பிரபாகரன், வீ வோண்ட் தமிழ் ஈழம்' போன்ற அங்கில வார்த்தைகளில் டிப்பிளமோ எடுத்த இந்த புலக்கொடி வீரர்களில் பலர் வேலைக்கு பேவதே இல்லை! அரச பணத்தில் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவையும் கறந்து சாட்டு மேனிக்கு ஒரு மினிக் கப் அல்லது கடையில் பகுதி நேர வேலை என்று வாழ்க்கை ஓட்டுவார்கள். இந்த பகுதி நேர வேலை கூட அண்மையில் பிரித்தானிய அரசு வேலையற்றோருக்கு கொடுக்கும் கொடுப்பனவுகளில் பல இறுக்கங்களை கொண்டு வந்ததை அடுத்தே செய்து வருகின்றனர். ஆனால் இந்த புலக்கொடி வீரர்கள் பண விசயத்தில் வலு கறார்! வட்டிக்கு கொடுத்தல் பினாமி பெயரில் வியாபாரம் செய்வது போன்ற பல கில்லாடி வேலைகளை செய்து வருகின்றனர்.

இப்படியான ஒரு புலிக்கொடி வீரர்தான் அண்மையில் இலங்கை சென்ற போது இவரது கில்லாடி வேலையாலேயே இலங்கை உளவுத்துறையிடம் மாட்டிக்கொண்டு விட்டார். லண்டனில் வட்டிக்கு பணம் கொடுக்கும் இந்த புலிக்கொடி வீரர் அண்மையில் தன் குடும்ப சகிதமாக வன்னி சென்றுள்ளார். வட்டிக்கு பணம் கொடுப்பது பாவச் செயல் என்பதாலோ என்னவோ தனது பாவங்களை கழுவ ஒரு கோயிலில் நேர்திகடனை முடிக்கவே அங்கு பயணமானார். நேர்த்திக்கடன் எல்லாம் முடிந்து லண்டன் திரும்ப இருக்கையில் இலங்கை உளவுத்துறை புலிக்கொடி வீரரை மடக்கிப் பிடித்தது.
வழமை போல புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் குய்யோ முறையே என்று கூச்சலுடன் அப்பாவித் தமிழனை மடக்கிய இலங்கை அரசு தமிழரை அழிக்கும் இலங்கை அரசு என்ற தலையங்கத்துடன் செய்திகளை வெளியிட்டனர். லண்டன் வாழ் புலிக் கொடி ஜனநாயக வாதிகளோ உடனே ஐயோ அப்பாவி தமிழர்களை இலங்கை அரசும் இராணுவமும் துன்புறுத்துவதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேணும் என்று ஒப்பாரி வைத்தனர். பிரித்தானிய தமிழனுக்கே இந்த கதி என்றால் இலங்கை தமிழனின் கதி என்ன என்று இந்திய தமிழ் தேசிய விசிலடிச்சான் குஞ்சுகள் ஓலம் இட்டனர். ஆனால் தற்போது உண்மைகள் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்ததும் அனைவரும் ஓட்டுக்குள் போன ஆமை போல அடங்கி விட்டனர்.

நடந்தது இது தான்! கைது செய்யப்பட்ட புலிக்கொடி வீரர் புலிகள் ஊர்வலம் எதற்கும் தவாறது போய் வருபவர். ஜெனிவா முதல் பெல்ஜியம் வரை, பிரித்தானியா கொடுக்கும் வேலையற்றோர் கொடுப்பனவில் இருந்து பெற்ற பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்த குட்டிக்காசில் பயணம் செய்து வருபவர். இவரிடம் ஒரு அப்பாவி தமிழர் தனது அவசரத்திற்கா குடும்ப சொத்தான நகைகைள் அனைத்தையும் கொடுத்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். அந்த அப்பாவியின் கஷ்டகாலம் பணத்தை திருப்பி கொடுக்க சிறுது தாமதமாகி விட்டது. அப்பாவியும் இந்த புலிக்கொடி வீரரிடம் கெஞ்சி மன்றாடி தனது நகைகளை எப்படியாவது வெகு விரைவில் திருப்பி எடுத்து விடுவேன் கொஞ்சம் பொறுங்கள் என்று கேட்டுள்ளார். விடுவாரா இந்த புலிக்கொடி வீரர்! தனது புலி வீரத்தை காட்ட இதுதான் தருணம் என்று தங்க விலை மிக உச்சமாக இருந்த கட்டத்தில் அனைத்து நகைகளையும் விற்று வட்டிக்கு கொடுத்த பணத்தை விட முன்று மடங்கு லாபத்தை பெற்றார்.

அண்மiயில் இந்த புலிக்கொடி வீரர் ஊருக்கு போவதை அறிந்த அந்த அப்பாவி தன் வன்மத்தை தீர்க்க இதை விட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை உணர்ந்து இலங்கை உளவுத்துறைக்கு புலக் கொடி வீரரை பற்றி நன்றாக போட்டுக் கொடுத்து விட்டார். இந்த அப்பாவி போட்டுக்கொடுத்த முக்கியமான ஒரு விடயம் லண்டனில் புலிகளுக்கு பணம் சேர்த்த முக்கிய நபரின் சகோதரர் தான் இந்த புலிக்கொடி வீரர் என்றும் புலிகளுக்கு சேர்த்த பணத்தில் பெரும் பங்கை இவர்தான் வட்டிக்கு கொடுத்து வருவகிறார் என்று மிக துல்லியமாக தெரிவித்துள்ளார்.

வட்டிக்கு கொடுத்த பணத்தில் அரைவாசியை இப்போது புலிக்கொடி வீரரின் விடுதலைக்கு இலங்கையில் அள்ளிக்கொடுக்க வேண்டி வந்துள்ளதாம். ஆனால் இந்த புலிக்கொடி வீரர் விடுதலை செய்து இங்கிலாந்து வரும் போதுதான் ஆப்பு இன்னும் இறுக்கப் போகிறதாம். பகுதி நேர வேலை பாரத்தபடி பிரித்தானியாவில் வருமானம் போதாது என்று உதவித்தொகை பெற்ற படி ஆயிரக்கக்கான பவுன்ஸ் செலவு செய்து எவ்வாறு குடும்பத்துடன் இலங்கை சென்று வந்தீர்? என்ற கேள்விக்கு புல்ககொடி வீரர் என்ன பதில் கொடுக்க போறாரே தெரியவில்லை. ஆனால் அது மட்மல்லாது இலங்கை உளவுத்துறையும் இவரின் வட்டி விவகாரங்களையும் ஜெனிவா மற்றும் பெல்ஜியம் பயணங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் பிரித்தானிய உளவுத்துறையிடம் கையளித்துள்ளனர்! புலிக்கொடி வீரர் இலங்கையில் இருந்து இலண்டன் திரும்பியதும் மிண்டும் சிறை செல்வதோடு தனது சொத்துகள் அனைத்தையும் பறி கொடுக்க வேண்டிய கட்டாயமும் இதனால் வரலாம்! இந்த புலிக்கொடி வீரர் இழுத்துள்ள ஆப்பு சாதாரண ஆப்பல்ல அகில உலக ஆப்பான ஆப்பு!

2 comments :

Anonymous ,  June 6, 2013 at 3:41 PM  

ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளிருந்து தமிழ் மக்கள் வன்னிக்கு சென்று வருகிறார்கள்,

ஆனால் ஓரிருவருக்கு மட்டும் பிரச்சனை என்றால் அதில் எதோ ஒரு காரணம் பின்புலத்தில் உள்ளதை எவரும் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.
ஆனால், அண்மையில் லண்டனிலிருந்து வன்னிக்கு போனவர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதை புலன்பெயர் பினாமி செய்திகள் தங்கள் வழமையான பொய், துவேச, கற்பனை செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. அதையும் பல மண்டை கழண்ட கூட்டம் நம்பிகொண்டிருக்கிறது. இதுவே கள்ளர், காடையர்கள் புலிக்கொடி பிடுத்து, உண்டியல் குலுக்கி மக்களை ஏமாற்றி பிழைப்பதற்கு வசதியாகி விட்டது.

பி.கு : நல்லவேளை இந்தியாவில் கடத்தப்பட லண்டன் தம்பதிகள் இலங்கையில் கடத்தப்படவில்லை. அப்படியாயின் புலன்பெயர் புலிப்பினாமி செய்திகள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

Anonymous ,  June 6, 2013 at 6:39 PM  

Some of the Tamil expatriates around Europe and Canada make use of Srilankan politics & opening of new temples, media services for their commercial purposes.These all presently money spinning businesses and makes them popularity in a different way.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com