Tuesday, June 25, 2013

செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சந்தேகம்! மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்!

மனைவி அடிக்கடி செல்போனில் பேசியதால் சந்தேகம் கொண்டு மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, 35 வயதான பெருமாள் சேலம் புதுப் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பாக்கெட் சிப்ஸ் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி பெயர் உஷாராணி வயது 29. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பெருமாளுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வரும். உஷாராணி செல்போனில் மற்றவர்களுடன் பேசுவதை அறிந்து பெருமாள் அவரை சத்தம் போட்டு வந்தார். இவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் சமாதானம் செய்து வந்தனர். நேற்று இரவு வீட்டில் பெருமாள், அவரது மனைவி, குழந்தைகள் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது 10.30மணி அளவில் நள்ளிரவில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பெருமாள், உஷாராணியை அடித்து உதைத்தார். இதனால் உஷாராணி அலறினார். இதை கேட்டு 3 குழந்தைகளும் எழுந்து அவர்களும் அழுதனர். இவர்களை பெருமாள் மிரட்டி விட்டு வீட்டுக்குள் இருந்த கொடுவாளை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக தாக்கி வெட்டிக்கொன்றார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த உஷாராணி அதே இடத்தில் துடிதுடித்து இறந்து விட்டார்.

இதை பார்த்த குழந்தைகள் சத்தம் போட்டு அழுதனர். பின்னர் அவர்கள் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓட முயன்றனர். ஆனால் முடியவில்லை. பிறகு அவர்கள் கதவை தட்டி சத்தம் போட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்தனர். இதனால் அருகில் வசிப்பவர்கள் அங்கு ஓடி வந்து கதவை திறக்க முயன்றனர். ஆனால் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. இந்த நிலையில் பெருமாள் தனது மனைவியின் சேலையை எடுத்து வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

1 comments :

Anonymous ,  June 25, 2013 at 10:15 AM  

சந்தோகம் என்பது ஒரு புற்று நோய் இது ஒரு தடைவை வந்தால் ஒரு போதும் மனதை விட்டு செல்லாது. இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தான் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த மனநிலையில் இருந்து ஆண்களோ பெண்களோ கட்டாயம் மாற வேண்டும் அப்போது தான் குடும்பத்தை சரியாக கொண்டு நடாத்த முடியும். ஓவ்வொருவருடைய கையில் தன் உள்ளது தாங்கள் எவ்வளவு புனிதமாக வாள வேண்டும் என்று. இவர்களின் இவ்வாறான முட்டாள் தனமான செயற்பாடுகளால் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டும் தான்
தனது மனைவியோ அல்லது கணவனோ தன்னை சந்தேக படவில்லை என்பதற்காக தனது விருப்பப்படி நம்பிக்கைக்கு துரோகமாக யாராவது ஆடினால் கட்டாயம் கடவுள் தண்டனை கொடுப்பான்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com