பஸ் டயரில் சிக்கியதில் பிரிந்தது பெண்ணின் உயிர்
கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி ரயில்வே வீதியில் இன்று(18.06.2013)காலை பஸ் டயரில் சிக்கி கடுவெல பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸில் ஏறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் இடறி வீழ்ந்தமையினால் பின்புறமாக வந்த பஸ்ஸின் டயரில் அகப்பட்டதால் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரது சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment