எல்.ரீ.ரீ.ஈ.யினர் வைத்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டுமென்று யாழ் வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி.........உச்ச நீதிமன்றம.!
யாழில் எல்.ரீ.ரீ.ஈ. யினரின் அதிகாரம் நிலவிய வேளையில் புலி ஆதரவாளர்களால் அதிகாரிகளின் அனுமதி இன்றி பெயர்மாற்றம் செய்யப்பட்ட யாழ் வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி கிராமத்தை மீண்டும் முன்னர் அழைக்கப்பட்ட பெயருக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை செயலருக்கு உத்தரவிட்டது.
எல்.ரீ.ரீ.ஈ.யினர் தமது கிராமத்திற்கு வைத்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டுமென்று யாழ் வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கெண்ட போதே உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
இதற்கிணங்க தற்போது 'சிந்துபுரம் வர்த்தகச் சந்தை' என குறிப்பிடப்படும் பெயர்ப்பலகையை நீக்கி, அதற்கு வட்டுக்கோட்டை வர்த்தக சந்தை எனப் பெயரிடுமாறும் உச்ச நீதிமன்றம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை செயலருக்கு உத்தரவிட்டது.
யாழ்பாணத்தில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் அதிகாரம் நிலவிய வேளையில் புலி ஆதரவாளர்கள் அதிகாரிகளின் அனுமதி இன்றி 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி மாவீரர் தினத்தில் இக்கிராமத்தின் பெயரை சிந்துபுரம் என மாற்றினர்.
யுத்ததி வெற்றிக்குப் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் பலம் சீர்குலைந்த பின்னர் இப்பகுதியிலுள்ள காந்தி ஜீ சமூக சேவை நிலைய உறுப்பினர்கள் சிலர் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்ட புலி உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான மாவீரர் தினம் என்ற பகுதியை அழித்து மீண்டும் சிந்துபுரம் பொது வர்த்தக சந்தை என பெயர்ப்பலகையைத் தயாரித்துள்ளனர் அத்துடன் சில அமைப்புகள் தொடர்ந்தும் சிந்துபுரம் என்றே பாவித்து வந்துள்ளன.
இதனால் கிராம மக்களிடையே பிரச்சினை உருவாகின. சிந்து என்றால் இரத்தம் சிந்துதல், நாசமாகுதல் என்பதால் அங்கு பல குலத்தவர்கள் வாழ்வதாகக் கூறிய மனுதாரர்கள், சிந்துபுரம் என்ற பெயரை இடுவதால் இந்திய குளமான சிந்துநாடார்கள் மட்டும் இருப்பதாகத் தெரியுமெனத் தெரிவித்தனர். அத்துடன் இப் பெயர்மாற்றம் தொடர்பாக பிரதேச சபை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தெரிவித்த மக்கள், தமது கிராமத்தை மீண்டும் பழைய பெயரில் சிவன்கோவிலடி என்று பெயரிட்டு, வர்த்தமானி அறிவித்தலைப் பிறப்பிக்குமாறும், சிந்துபுரம் என்ற பெயரைப் பாவிப்பதை நிறுத்துமாறும் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கேட்டனர்.
1 comments :
புலிகள் செய்த அராஜகத்தில் இது சின்ன ஒரு விடயம். இதைப்போல எத்தனையோ கேவலம் கெட்ட வேலைகளை அவர்கள் மக்களின் விருப்பம் இல்லாமல் தன்னிச்சையாக செய்துள்ளார்கள் என்பதை இந்த சின்ன விடயத்திலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். புலிகள் தமிழ்மக்களுக்காக எதையும் செய்யவில்லை மாறாக தழிழ்மக்களுக்கு எண்ணற்ற துன்பங்களை கொடுத்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.
Post a Comment