Sunday, June 16, 2013

கட்டையாக சட்டை போட்ட மாணவியை ஆசிரியை எச்சரித்ததால் தந்தை சீற்றம்! ஆசிரியயை முழங்காலில் நிறுத்தி அட்டகாசம்!

வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமார நவகத்தேகம, இசுறு பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழங்காலில் நிறுத்தி அவமானப்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் உத்தரவிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நவகத்தேகம இசுறு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் வடமேல் மாகாணசபை உறுப்பினரின் மகள் பாடசாலைக்கு அணிந்துவந்த சீருடை கட்டையாக இருந்தனால் அம்மாணவியை எச்சரித்துள்ளார். இதனை அம்மாணவி தன் தந்தையான வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரிடம் தெரிவித்ததையடுத்து, பாடசாலைக்குச் சென்ற வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியயை ஏசி, எச்சரித்து பின்னர் முழங்காலில் வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த ஆசிரியை இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த ஆசிரியை பாசடாலை ஒழுக்காற்று குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments :

Anonymous ,  June 16, 2013 at 6:20 AM  


இவ்வாறான படிப்பறிவில்லாத அரசியல் வாதிகளால்தான் இந்நாடு இருண்ட யுகத்திற்கு செல்லப்போகின்றது. இவன் ஏன் இவனுடைய மகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். படிக்கவா? அல்லது வேறு ஏதும் செய்யவா? ஆசிரியர்கள் அவர்களது புனிதமான தொழிலை சுதந்திரமாக செய்ய இவனைப் போன்ற முட்டாள் அரசியல் வாதிகள் விடமாட்டார்களா? ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக இவனுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும்.

Anonymous ,  June 16, 2013 at 7:45 AM  

You need a good education,with the knowledge of behavioural science to hold a position in public.He may thinking that he is the mighty king in this Era of the present government,because we feel the government has given maximum concessions to some of the unruly elements they have in their government.Just a public figure bullying in a school and asking the lady teacher to kneel down is really a challenge to the entire department of education,even to the public.He may be having some boot lickers to support him however this serious matter is in the hands of the public.Let the entire children of all the schools to boycott the classes until this particular bozo is punished,.We do repect that particular teacher and her honorary duties.

மாறன் ,  June 16, 2013 at 4:30 PM  

இந்த பு.மகனுக்கு நலம் அடிக்க வேணும்.

Anonymous ,  June 16, 2013 at 6:22 PM  

The citizens are so foolish to elect this type of swollen and empty headed
guys as their representatives.The high authority of the Government should take this matter into consideration also the legal system has more power to punish this buffalo severely.He may be thinking that her daughter the princess of that area for us she is just a peanut.
We have heard about the real dictators,this buffalo also enter into that catergory as a bogus dictator.

Anonymous ,  June 16, 2013 at 7:01 PM  

Be cautious,thuggish brutality finally enters the schools.

Anonymous ,  June 16, 2013 at 8:06 PM  

He should be put over his knee in a public place for the whole day or continuesly for days until his knee
get bursted.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com