ஒரே சூலில் 5 குழந்தைகள்! கண்டியில் சம்பவம்!
பெண் ஒருவர் கண்டி வைத்திய சாலையில் ஒரே சூலில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதுடன், குழந்தைகளின் தாய், சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டி, மடவளை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பாத்திமா பேர்ஜிசியா, கண்டி வைத்தியசாலையில் வைத்து இந்த 5 குழுந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இந்த 5 குழந்தைகளில் ஒரு குழந்தை பெண்யெனவும், மற்ற ஏனைய 4 குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என்றும், கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அநுர திசாநாயக தெரிவித்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையில் நரம்பியல் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டொக்டர் கபில குணவர்தன தகவல் தருகையில், இந்த பிள்ளைகள் 600க்கும் 700க்கும் இடைப்பட்ட கிரேம் எடை கொண்டவர்கள் என்றும், இவர்கள், கண்டி, பேராதனை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக வைத்தியசாலைகளின் சிறுவர் பிரிவுகளில், அதிதீவிர கண்காணிப்பின் கீழ் இருப்பதாக, தெரிவித்தார்.
0 comments :
Post a Comment