நாட்டை விட்டு தப்பியோட முயன்ற சாகரிகா, 50 இலட்சம் ரூபா பிணை முறியுடன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!!
பிரட்ரிக் நஓமான் மன்றம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு செய்த திடுக்கிடும் சூழ்ச்சிகள் அம்பலம்!!
50 இலட்சம் ரூபா பிணை முறியின் கீழ், மீண்டும் நாடு திரும்ப வேண்டுமென்ற உறுதி மொழியுடன் சாகரிகா தெல்கொடவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு தப்பியோட முற்பட்டபோது, சாகரிகா தெல்கொட, இரகசிய பொலிஸாரின் பிடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், சாகரிகா இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜரானார்.
பிரட்ரிக் நஓமான் மன்றத்தின் இலங்கை பிரதிநிதியென கருதப்படும் சாகரிகா தெல்கொட மீது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நாட்டுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், பிரட்ரிக் நஓமான் மன்றம், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து, எல்.ரி.ரி.ஈ புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கேற்ப, புலி ஆதரவு ஆட்சியொன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை நடாத்தும் போர்வையில், அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளை, மேற்கொள்ள திட்டம் தீட்ட, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயற்பட்டறைகளை நடாத்த, சாகரிகா தெல்கொட, செயற்படுவதாக, தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இதனடிப்படையில் சாகரிகா தெல்கொட, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடர்பான பல்வேறு தகவல்களை சாகரிகா தெல்கொடவின், பிரட்ரிக் நஓமான் மன்றத்தினூடாக அம்பலமாகியுள்ளதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
விசாரணைகளுக்கென ஏற்கனவே இரகசிய பொலிஸாரின் பிடியிலிருந்த சாகரிகாவிற்கு நாட்டை விட்டு வெளியேற முடியாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் ஜேர்மன் செல்வதற்காக கட்டுநாயக விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்துபோது, இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சாகரிகா தெல்கொட, இரகசிய பொலிஸாரின் பிடியிலிருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். சாகரிகா தெல்கொடவின் சட்டத்தரணிகள், இன்று நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில், தமது கட்சிக்காரர் கடந்த 23ம் திகதி வெளிநாடு செல்ல முற்பட்டபோது, இரகசிய பொலிஸாரினால் விமான நிலையத்தில் வைத்து அவர் தடுக்கப்பட்டார் என தெரிவித்தனர்.
எனினும் இவர் வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பாவிட்டால், அவருக்கு எதிராக உள்ள விசாரணைகளுக்கு தடை ஏற்படலாமென்ற காரணத்தினால், நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்ததாக, இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட பிரதம நீதவான் ஜிஹான் பிலபிட்டியவிற்கு, சாகரிகா தெல்கொடவிற்கு 50 லட்சம் ரூபா பிணை முறியை வைப்பிலிட்டு, மீண்டும் நாடு திரும்பும் உததரவாதத்தின் கீழ் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கினார்.
சாகரிகா தெல்கொட, வெளிநாடு சென்று நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபடும் முயற்சிகளில் இருந்ததாக, சந்தேகம் எழுந்துள்ளதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். பிரட்ரிக் நஓமான் மன்றம் உட்பட ஜேர்மனியிலிருந்து செயற்படும் பிரட்ரிக் ஈபட் மன்றமும், நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளில் முன்னணி வகித்து செயற்பட்டு வருவதாக, தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவிலிருந்து கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நவநீதம்பிள்ளையுடன் பிரட்ரிக் ஈபட் மன்றம், நேரடி தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாகரிகா தெல்கொடவிற்கும், நவநீதம் பிள்ளைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாகவும், அம்பலமாகியுள்ளன. இந்நிலையில் பிரட்ரிக் ஈபட் மன்றத்தின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட்ட நோரா லங்கன்வாஹன் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை தமது அலுவலகததை மூடிவிட்டு, நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
அவருக்கு பிரட்ரிக் ஈபட் மன்றத்தின் கீழ் செயற்படும் இலங்கை நிறுவனமொன்றின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் ஆதரவு வழங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. நோரா லங்கன்வாஹன் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு தப்பி செல்வதற்கும், சாகரிகா தெல்கொடவின் தடையை கருத்திற்கொள்ளாமல், ஜேர்மனிக்கு தப்பி செல்ல முயற்சிப்பதனூடாக, இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் அறிகுறிகள் தென்படுவதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக் கின்றனர்.
இலங்கையின் தற்போதைய தலைமைத்துவம், யுத்த வெற்றிகளுக்கு அடிப்படையான பாதுகாப்பு பிரிவின் முக்கியஸ்தர்களை, சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு, நவநீதம் பிள்ளையின் சூழ்ச்சிகளுக்கு, சாகரிகா தெல்கொட, நேரடி பங்களிப்பை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தகவல்கள் வெளிவந்துள்ளன.
0 comments :
Post a Comment