Monday, June 3, 2013

கருத் தடை மாத்திரைகளையும், கருவிகளையும் கொள்வனவு செய்வோரில் 50 வீதமானோர் பிரத்தியேக வகுப்பு மாணவர்களே!

கம்பஹா நகரில் உள்ள மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்ற கருத்தடை மாத்திரைகளில் 50 வீதமானவற்றைக் கொள்வனவு செய்பவர்கள் 16 - 24 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள் என கம்பஹா நகராதிபதி எரங்க சேனாநாயக்க குறிப்பிடுகிறார். கம்பஹா நகர சபைக்குட்பட்ட பகுதிக்குள் அதிகாரம் வழங்கப்பட்ட 16 உல்லாச விடுதிகள் உள்ளன.

புதிதாக எந்தவொரு உல்லாசவிடுதியும் தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. எந்தவொரு நகரிலும் இவ்வாறான விடுதிகள் உள்ளன. அவை நாட்டுக்குத் தேவையானவை. ஆயினும், உல்லாசவிடுதிகள் என்ற பெயரில் தீயவிடயங்கள் நடைபெறுவதற்கு இடமளிக்க முடியாது. அவற்றை பல்வேறு முகாமைத்துவங்கள் மூலம் குறைத்துக்கட்ட வேண்டும். பொலிஸார் இங்கு நடைபெறும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பதற்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த போதும், அவற்றைச் செயற்படுத்துகின்ற கீழ்மட்ட அதிகாரிகள் மிகவும் மந்த நிலையில் செயற்படுவதால் குற்றங்களைக் குறைப்பதற்கு மிகவும் சிரமமாகவுள்ளது.

அதிகாரம் அளிக்கப்பட்ட உல்லாச (வாடி) வீடுகள் தவிர, அதிகாரமளிக்கப்படாத திருட்டுத்தனமாக நடைபெறுகின்ற வீடுகளும் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இவற்றை இல்லாமற் செய்வதற்கு சட்டவாக்க நிறுவனங்கள் உள்ளபோதும், அவை சரிவர நிறைவேற்றுவதில்லை என்பது தெளிவு.

நகர சபை மாத்திரம் இவ்வாறான விடுதிகளுக்குள் புகுந்து குற்றங்களை இல்லாமற் செய்யவியலாது. இன்று கம்பஹா நகருக்குள் உள்ள மருந்தகங்களில் (பாமஸி) விற்பனை செய்யப்படுகின்ற கருத்தடை மாத்திரைகளில் , உபகரணங்களில் நூற்றுக்கு ஐம்பது வீதமானவற்றை கொள்வனவு செய்பவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவர்களே! இவர்கள் 16 மற்றும் 24 வயதிற்குட்பட்ட மாணவர்கள் என மருந்தக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர்களுக்கு இவ்வாறானவற்றை விற்பதை நிறுத்த முடியும். ஆயினும், நாட்டின்பாலுள்ள நற்குணங்கள் பணத்திற்கு அடிமையாகியுள்ளன' எனவும் குறிப்பிட்ட கம்பஹா நகராதிபதி, கம்பஹா வாடி வீடுகளுக்கு வருவோர் பற்றிய சரியான விபரங்களை, புள்ளி விபரங்களை அறிந்திருப்பவர்கள் கம்பஹா நகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்களே என்றும் என்றும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com