பட்டம் பெற்றதை 250 கோடி ரூபா செலவழித்து கொண்டாடிய சவூதி அரேபிய இளவரசர்களில் ஒருவர்!
சவூதி அரேபிய இளவரசர்களில் ஒருவரான அல் சவூத் சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்தார்.தான் பட்டம்பெற்றதை நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக 19.5 மில்லியன் டொலர் (இலங்கை பெறுமதி 250 கோடி ரூபா) செலவழித்துள்ளார்.
இதற்காக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள “டிஸ்னிலேண்ட்” பொழுதுபோக்கு பூங்காவை மூன்று நாட்களுக்கு பதிவு செய்தார். தன் நண்பர்கள் 60 பேருடன் இந்த பூங்காவில் மூன்று நாட்களாக பொழுதை கழித்தார். இவருக்கு தனி பாதுகாப்புப் பிரிவுப் பணியில் அமர்த்தப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் இளவரசர் சவுத் 19.5 மில்லியன் டொலர் செலவிட்டதாக “டிஸ்னிலேண்ட்” நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
காலஞ்சென்ற சவூதியின் முடிக்குரிய இளவரசரான நயப் பின் அப்துல் அஸிஸ் பின் சவுத்தின் மூன்றாவது மனைவியின் மகனே பஹ்த் அல் சவுத் ஆவார். இவரது தாயான மாஹா பின்த் மொஹமத் பின் ஆஹமத் அல் சுதைசி பிரான்ஸின் ஆடம்பர ஹோட்டலான ஷங்ரி லாவில் 5 மில்லியன் பவுண் தொகை வில்லை வைத்துவிட்டு நள்ளிரவில் தப்பிச்சென்றார். இது தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் கடந்த மார்ச்சில் பிரான்ஸ் நீதிமன்றம் அல் சுதைசியின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment