பாசிசப் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவ மோகம் ஆடிய கோர வெறியாட்டத்தின் 23 ம் ஆண்டு நினைவு.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்தால் நிலைகுலைந்தது என்பது யாவரும் அறிந்தது. புலிகள் தமது பாசிசக் கொள்கைகளின் நிமித்தம் ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்டனர் என்பது வரலாற்றுப் பதிவு. இப்பதிவுகளின் வரிசையில் இற்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மண்ணில் கோழைத்தனமாக கொல்லப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா வை அக்கட்சியின் சுவிஸ் கிளையினர் நினைவு கூருகின்றனர்.
புலிகளின் கோர வெறியாட்டத்தை ஈபிஆர்எல்எப் இன் சுவிஸ் கிளையினர் நினைவு கூருகின்ற அதே சமயத்தில் அமரர் பத்மநாபாவினால் வழிநடத்ததப்பட்ட அரசியல் வியாபாரிகள் சிலர் இன்றும் புலிகளை தம் ஏகப்பிரதிநிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிவிக்கின்றனர்.
மேலும் அண்மைக்காலம் வரை புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை தாறுமாக விமர்சித்து வந்த அவரது வழித்தோன்றல்கள் பலரும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comments :
இந்த அமைப்பின் செயல்பாடு கடதாசியிலும் இணையத்திலும் தான் உள்ளது , ஒரு மண்டபம் எடுத்து மக்களை கூட்டி அஞ்சலி செலுத்த முடியாத குழுக்கள், ஆனால் சுவிசில் பிளாட் எனும் அமைப்பு பலவருடங்களாக தொடர்ச்சியாக அஞ்சலி கூட்டத்தை நடத்தி வருகின்றது.
Post a Comment