Friday, June 14, 2013

இந்திய மக்கள் தொகை 2028 இல் சீனாவை தாண்டும்' -ஐ.நா.

உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை ஐ.நா. சபை நியூயார்க்கில் நேற்று(13.06.2013) வெளியிட்ட புள்ளிவிபரத்தின் படி தற்போது சர்வதேச அளவில் மக்கள் தொகை 720 கோடியாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் அது 810 கோடியாக உயரும். அதே நேரத்தில் 2050ஆம் ஆண்டில் 960 கோடியாக மாறும் என தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் 2 மடங்கு அதிகரிப்பதுடன் இந்தியாவை பொறுத்தவரை இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

சீனாவை பொறுத்தவரை 2030 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகை பெருக்கம் குறைவடைவதுடன் 2100ஆம் ஆண்டில் அதாவது இந்த நூற்றாண்டு இறுதியில் சீராகி 110 கோடியாக மாறும் என கூறப்பட்டுள்ளதுடன் தற்போதுள்ள நிலவரப்படி வருகிற 2028ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் சீனாவை தாண்டும் என்றும் ஐ.நா. செளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  June 15, 2013 at 7:26 AM  

It would be a very nasty world.
Forget the happiness in the future

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com