13 ஆவது சட்டமூலத்தில் மாகாணங்களை இணைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
13 ஆவது திருத்த சட்டமூலத்தில் இரண்டு மாகாணங்களை இணைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்குவது தொடர்பான அரசாங்கத்தின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், குறித்த யோசனையை எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய கொள்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றைச் சமர்ப்பிக்க முன்னர், சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற பிரிவை மாற்றியமைப்பது தொடர்பில் ஏற்கெனவே அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது யோசனை தொடர்பாகவும், 13 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்தும், சகல கட்சிகளுடனும் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிதடத போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment