Thursday, June 6, 2013

'13' ஆவது திருத்தச் சட்டம் மறுசீரமைக்கப்படுமானால், கச்சதீவை இந்தியா கைப்பற்றும்...?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி ஆகியோரிடையே 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்து - இலங்கை உடன்படிக்கைக்கு ஏற்ப, வட மாகாணத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் இல்லாமற் செய்யப்பட்டால் 1974 ஜூன் மாதம்இலங்கை - இந்தியாவிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்போது இலங்கை நாட்டுக்குரியது என நிச்சயிக்கப்பட்ட கச்சதீவுடனான உடன்படிக்கையை நீக்க வேண்டும் என இந்திய அரசுக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தூதுவரலாயத்திலிருந்து வெளிவருகின்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.

இலங்கை அரசு வடக்கில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைக்குரித்தானது எனக் குறிப்பிடப்படுகின்ற இடம் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கு முடிவுசெய்தால், அது இந்து - இலங்கை உடன்படிக்கையை நிராகரிக்கும் தான்தோன்றித்தனச் செயலாக மாறும் என இந்திய சட்ட வல்லுநர்களினால் தெளிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வாறான ஒரு விடயத்திற்கு எவ்வாறு விருப்புத் தெரிவிப்பது என்றால், 1974 ஜூன் மாதம் 18 ஆம் திகதி பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா - இந்திரா காந்தி ஆகியோர் கைச்சாத்திட்ட கச்சதீவைக் கையளிக்கும் உடன்படிக்கையை நீக்குதாகும் எனவும் அவர்கள் மேலும் தெளிவுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினை மேலெழுந்த கையுடன் இந்திய அரசும் பெரும் இராசதந்திர பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இதுபற்றி உரையாடுவதற்காக எதிர்வரும் சில நாட்களில் புதுதில்லியில் விசேட மாநாடொன்றை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலிடத்து அரச அநுசரணையுடன் இம்மாநாட்டை ஒழுங்கு செய்துவருபவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுதர்சன் நாச்சியப்பன். இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், இந்து - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தால் அதற்கான மாற்றுவழிபற்றி தீர்க்கமான முடிவு இம்மாநாட்டில் எடுக்கப்படவுள்ளதால், கூட்டமைப்பு அதில் கலந்துகொள்வதை விரும்பாத நிலையில் இருப்பதையே காணக்கூடியதாயுள்ளது.

(கேஎப்)

1 comments :

Arya ,  June 6, 2013 at 2:43 PM  

இந்து - இலங்கை உடன்படிக்கை செயல் படுத்தப்படாததுக்கு காரணம் புலிகளும் அதை அந்நேரத்தில் ஏற்காத ploteமே ஆகும்.

'13' ஆவது திருத்தச் சட்டம் மறுசீரமைக்கப்புக்கு முன்பே சீனாவுக்கு கச்சதீவை குத்தகைக்கு கொடுக்க வேண்டும், சீன கடற்படை அங்கு இருக்குமானால் இந்தியா என்னத்தை ஆட்டி பார்க்க முடியும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com