ஆசிரியைக்கு முத்தமிட்ட ஆசிரியரின் வழக்கு 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
சங்கீத ஆசிரியைக்கு முத்தமிட்டதாக கூறப்படும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இருதரப்பு விளக்கங்களையும் எழுத்து மூலம் எதிர்வரும் 13 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி தரப்பிலான சாட்சியமளிப்புகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. குற்றஞ் சாட்டப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் இது தனக்கெதிரான பொய்யான குற்றச்சாட்டாகும் என்றும் தனிப்பட்ட கோபம் காரணமாகவே தன்மீது இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியைக்கே, அதே பாடசாலையில் உடற்பயிற்சி கற்பிக்கும் ஆசிரியர் முத்தமிட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தான் வகுப்பறையில் தனியாக இருந்த சமையம் வகுப்பறைக்குள் உடற்பயிற்சி ஆசிரியர் வந்தார் எனவும் எனவே அவரை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு கூறிய போதே குறித்த ஆசிரியர் தனக்கு முத்தமிட்டதாக அந்த முறைப்பாட்டில் ஆசிரியை தெரிவித்துள்ளார்.
1 comments :
Indecent behaviour,lacking of sense of decency,irritating mannerism especially in Srilankan educational institutions are extremely regrettable.It is shocking why these ugly things play a dominant role in our present society.
Post a Comment