13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத்தங்கள் மேற்கொள் வதற்கோ, விடமாட்டோம்! - வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ......!
13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் கச்சதீவு உடன்படிக்கை தானாகவே செயலிழந்துவிடும்!
13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத் தங்கள் மேற்கொள்வதற்கோ, மாகாண சபை முறைமையை இல் லாதொழிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை எனவும், அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும் பான்மை கிடைக்கப்போவதுவுமில்லை என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ராஜித சேனரத்ன, டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கூட்டாக சூளுரை விடுத்தனர்.
"மாகாண சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசுக்கூடாக ஐக்கிய இலங்கையை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சமசமாஜக்கட்சி அலுவலத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே இது தெரிவிக்கப்பட்டது.
அங்கு சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர கருத்து தெரிவிக்கையில் , 13ஆவது திருத்தம் மக்கள் ஆதரவுடன் கொண்டுவரப்படவில்லை. எனவே, அதனை ஒழிக்கவேண்டுமென அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச உட்பட சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் குரல் எழுப்பஆரம்பித்துள்ளனர். ஆனால், இத்திருத்தங்கள் எதற்கும் மக்கள் ஆதரவு பெறப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவே பெறப்பட்டுள்ளன. அன்று இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தீர்த்துவைத்தார். அதன் பின்னர் 1983 வரை இந்தியா எமது பிரச்சினையில் தலையிடவில்லை. ஸ்ரீமாவோ அன்று அந்தப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் இன்று ஈழப்பிரச்சினை அகலவத்தைவரை வந்திருக்கும்.
இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவின் தலையீடு இருக்கத்தான் செய்கிறது. பிரபாகரன் உயிரிழக்கும் வரை இந்திய மத்திய அரசாங்கமோ கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இலங்கைக்கு எதிராக எதனையும் பேசவில்லை. யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவு அளப்பரியதாகும். அன்று இதனை புகழ்ந்தனர். ஆனால், இன்று இந்தியாவின் 13ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் கச்சதீவு உடன்படிக்கை தானாகவே செயலிழந்துவிடும். இலங்கையின் பாதுகாப்புக்கு சீனா உதவியளிக்கும் என்பதில் எந்தவிதமான நிச்சயமும் இல்லை. ஏனெனில், அண்மையில் இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட சீனாவின் புதிய பிரதமர், வரலாற்று நட்புறவுடனான இரண்டு நாடுகள் இணைந்துள்ளன. இனிமேல் நாம் இருவரும் இணைந்து தீர்மானங்கள் எடுப்போம் என கூறியுள்ளார். எனவே, சீனா எமக்கு உதவுமென்பதில் எந்தவித உண்மையும் இல்லை. 26 வருடங்களுக்கு பின் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனை எதிர்ப்பதன் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுவதை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment