Friday, June 14, 2013

வாசு, டியூ, ராஜித்த, ஹக்கீம் ‘13’ இற்காக அமைச்சரவையில் இழுபறி...

13 ஆவது திருத்தச் சட்டத்திற்காக எடுக்கவுள்ள இறுதித் தீர்மானம் தொடர்பாக அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சூடுபிடித்திருந்தது. அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித்த சேனாரத்ன, டியூ குணசேக்கர், ரவூப் ஹக்கீம் ஆகியோர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றக்கூடாது எனக் குறிப்பிட்டிருப்பதுடன் அமைச்சர் விமல் வீரவன்ச அதனை மாற்றியமைக்காமல் வடக்கில் தேர்தல் நடாத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெளிவுறுத்தியுள்ளார்.

பெரும் சத்தத்துடன் விவாதம் நடைபெறும்போது அமைச்சர் டியூ குணசேக்கர, விமல் வீரவன்சவுக்கு தீயசொற்களைப் பயன்படுத்திப் பேசியிருப்பதுடன், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ’88-89 களில் ஜேவீபீயினரை இல்லாமற்செய்ய ப்ரா இயக்கம் உருவாக்கப்பட்டது உண்மை’ எனவும் குறிப்பிட்டார்.

விமல் வீரவன்ச இப்போது தாக்கப்படுவார்... இப்போது தாக்கப்படுவார் என ஏனைய அமைச்சர்கள் பார்த்துக்கொண்டிருந்த வேளை, அவ்விடத்தில் உடனடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலையிட்டு 13 ஐ இல்லாமற் செய்வது விமலின் தனிப்பட்ட கருத்தல்ல எனக்கூறியிருப்பதால் ஒருவாறு அமைதி நிலவியுள்ளது. எதுஎவ்வாறாயினும், இறுதித் தீர்மானம் யாதெனில் 13 இரண்டு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதுடன் 154(A) சரத்தை மாத்திரம் மாற்றியமைப்பதற்கும், இதுதொடர்பில் மேலும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தேர்வுக்குழுவினரிடம் இவ்விடயம் கையளிக்கப்படவுமுள்ளது.

பேச்சுவார்த்தையின் இறுதியில் அமைச்சர்களில் பெரும்பாலானோர், பல்வேறு இடைஞ்சல்களுக்கும் மத்தியில் விமல் வீரவன்ச தன்னுடைய கருத்தை முன்வைப்பதில் தளராத நிலையில் இருந்தமையைக் குறித்து அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com