13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜனாதிபதி இணங்கியிருப்பது, நாடு பெற்ற.........-விமல் வீரவன்ச
மாகாண சபைகளின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், ஜனாதிபதி சரியான முடிவை எடுப்பார் எனவும், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜனாதிபதி இணங்கியிருப்பது, நாடு பெற்ற வெற்றியாகும் என, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியாவுடன் செய்து கொண்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்த்திருத்தம் என்பதனாலும், அந்த அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஈன்றெடுத்த மாகாண சபையின் அதிகாரங்களை சீர்த்திருத்துவது என்ற வார்த்தையை கூட, பயன்படுத்த அஞ்சிய ஒரு காலம் இருந்தது எனவும், அவ்வாறான ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதன் முதலாக ஜனாதிபதி, நேற்றைய அரச தலைவர்கள் கூட்டத்தில் வட மாகாண தேர்தலை நடாத்துவதற்கு முன்னர், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை பாதிக்கும் சரத்துகளை, சீர்த்திருத்துவதாக கூறினார். இது முக்கியமான ஒரு முன்னெடுப்பாகுமென, நாம் நினைக்கின்றோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானத்திற்கு ஏற்ப, எதிர்காலத்தில் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அதுபோன்ற மேலும் பல பாதிப்பான விடயங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தையும், ஒரே முறையில் சீர்த்திருத்துவார் என, நாம் நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment