13வது திருத்தச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு ஊவா மாகாண சபையில் 19 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!
13வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில், இரண்டு மாகாண சபைகளை ஒருங்கிணைப்பதற்கு இடமளிக்காமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை, ஊவா மாகாண சபையில் 19 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.
13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தினால் ஏற்படுத்தப் பட்ட மாகாண சபைகளில், இரண்டை அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகளை ஒன்றிணைக்கப்பட்டால், அம்மகாண சபைகளை அமைப்பதன் அடிப்படை நோக்கம் நிறைவேறாது என, ஊவா மாகாண சபையில் வலியுறுத்தப்பட்டது.
இதனால், இரண்டு மாகாண சபைகளை ஒருங்கிணைக்க இடமளிக்க முடியாதென தெரிவித்து, ஊவா மாகாண சபை உறுப்பினர் விமல் கலகம ஆராச்சி சபையில் பிரேரணையை சமர்ப்பித்தார், அதற்கிணங்க அப்பிரேரணைக்கு ஆளுங்கட்சியின் சார்பாக 13 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேநேரம் இப்பிரேரணை, தெற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாண சபைகளில் மேலதிக வாக்குகளினால் நிறைவேறியமை, குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment