Monday, June 3, 2013

1.2 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான புலிகளின் உடைமைகள் அரசுடைமையாக....

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குச் சொந்தமான ரூபா 1.2 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவு குறிப்பிடுகிறது.

அந்தச் சொத்துக்களில் இடம், வீடுகள், வாகனங்கள்,வங்கிக் கணக்குகளை அச்சிடும் அச்சகம் உள்ளிட்ட பெருந்தொகையான சொத்துக்கள் உள்ளடங்குவதாகவும், அவற்றில் பெரும்பான்மையானவை கொழும்புக்கு வெளியே இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிடுகின்றது.

விசேடாக அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூபா 85 மில்லியன் தொகையை சென்ற வருட இறுதிப் பகுிதியில் கண்டுபிடித்து அரச உடைமையாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கணக்குகளிலிருந்த ரூபா 55 மில்லியனும் இந்நாட்டுக் கணக்குகளிலிருந்த ரூபா 55 மில்லியனும் அந்தக் கணக்குகளிலிருந்து அரச உடைமையாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எல்.ரீ.ரீ. ஈ இயக்கத்தினருக்குச் சொந்தமான இடங்களில் பெரும்பாலானவை கொழும்புப் பிரதேச இடங்களென்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்துகின்றது. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, கொள்ளுப்பிட்டிய, கொழும்பு, கொட்டஹேன, கிரேண்ட்பாஸ் கட்டுநாயக்க, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான இடங்கள் இருந்து, அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறாயினும், இன்னும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எதிர்வரும் காலங்களில் கண்டுபிடிக்கப்படவுள்ளன எனவும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  June 3, 2013 at 7:03 PM  

நாசமாக போனவங்கள், கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நேர உணவோ, உடையோ ஒருபோதும் கொடுத்தது கிடையாது. அத்துடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத்தால் வழக்கப்பட்ட நிதி, பொருட்களையும் தங்கள் சொத்தாக எடுத்திருந்தார்கள்.
அப்போ அதைப்பற்றி ஒருவரும் கேட்டதுமில்லை, பேசியதுமில்லை. மாறாக அநீதி, அக்கிரமத்திற்கு என்று அள்ளி வீசினார்கள்.
இன்று எல்லாமே அநியாயமாக, எமக்குமில்லை, உனக்குமில்லை என்றாக போய் விட்டது.
இதற்கு முழு காரணம் புலிக்கொடி பிடித்த, புலன் பெயர் எருமை கூட்டங்களே யாகும்.
கடவுளால் மனிதனுக்கு ஆறறிவு படைக்கப்பட்டது, சிந்தித்து செயல் படுவதற்கே.
இனியாவது திருந்துங்களா?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com