1000 கிலோ எடையுள்ள பாரிய குண்டுகள் கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது! எல்.ரி.ரி.ஈ உறுப்பினரின் வாக்குமூலம்!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கிணங்க எல்.ரி.ரி.ஈயினரால் கொண்டு வரப்பட்ட 1000 கிலோ கிராம் எடையுள்ள பாரிய குண்டுகள் கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பிரதான நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
போர் நடந்த காலத்தில், எல்.ரி.ரி.ஈ யினரால் கொழும்புக்கு கடத்தி வரப்பட்ட 1000 கிலோ கிராம் எடையுள்ள பாரிய குண்டுகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தனக்குத் தெரியும் என எல்.ரி.ரி.ஈ யினரின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் ராஜேந்தரகுமார் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்ததை அடுத்து, இது சம்பந்தமாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் குண்டுகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக குறித்த நபரை மூன்று நாட்கள் தம்மிடம் ஒப்படைக்க அனுமதியளிக்குமாறும் நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்தே கொழும்பு மேலதிக நீதிவான் நிரோஷா பெர்ணன்டோ எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் பாலசுப்ரமணியம் ராஜேந்திரகுமாரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட பிரதான நீதவான் அவருக்கு பாதுகாப்பளிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment