மாத்தறையிலிருந்து கொழும்புக்கு 1 1/2 மணித்தியாலங்களே...! காலி - மாத்தறை நவம்பர் 18 இலிருந்து...
தெற்கின் அதிவேகப் பாதையில் காலி பின்னதுவையிலிருந்து மாத்தறை வரையான பகுதி நவம்பர் மாதம் 18 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகின்றார்.
இந்தப் பகுதியையும் திறந்துவைத்ததன் பின்னர் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு ஒன்றரை மணித்தியாலங்களில் பயணம் செய்யலாம் எனவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
நேற்று முன்தினம் (09) மாத்தறையில் இடம்பெற்ற மாத்தறை - கொடகமை வரை உட்பிரவேச வீதி நிர்மாணிப்புப் பணிகளை ஆரம்பிக்குமுகமாக நடைபெற்ற விழாவின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மாத்தறையிலிருந்து கொடகமை வரையிலான நுழைவுப் பாதையை அமைப்பதற்காக, அரசாங்கம் பெற்றுக்கொண்ட இடங்களுக்காக 420 பேருக்கு 437 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment