Wednesday, May 15, 2013

வந்த வந்த அரசெல்லாம் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றது...! இன்று எங்கள் பூமியை கைப்பற்றிக்கொண்டிருக்கிறது அரசு! - TNA

அரசாங்கம் தங்கள் உரிமைகளை மிகச் சூட்சுமமான முறையில் அழித்து, இராணுவத்தினருக்கு அரண்களை அமைத்து, தங்கள் இடங்களை பலாத்காரமாகக் கைப்பற்றிவருவதாகவும், இலங்கையில் ஆட்சிபீடமேறிய எல்லா அரசியல் கட்சிகளும் தமிழர்களை ஏற்றிவந்ததே தவிர நன்மையேதும் செய்யவில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி யோகேஷ்வரன் குறிப்பிடுகிறார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போதே பாராளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'இலங்கை ஆட்சிபீடமேற முன்னர் அனைத்துக் கட்சிகளும் தமிழர்களைக் கவனித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுவிட்டு, ஆட்சிபீடமேறியதன் பின்னர் நீயாரோ நான் யாரோ? என்று வழங்கிய வாக்குறுதிகளை வீசியெறிந்துவிடுகின்றன.'

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக நிலம் என்பதை ஒப்புக்கொண்டு அன்று, பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆயினும் 1965 இல் ஆட்சியிலமர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி அவ்வொப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, டட்லி சேனாநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது. தமிழ் மக்கள் தங்களது தலைவராக செல்வநாயகத்தை ஏற்றுக்கொண்டு இருப்பதை அறிந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, டட்லி சேனாநாயக்கவின் ஆட்சியைக் கவிழ்த்து தமிழர்களை ஏமாற்றினார்' என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  May 15, 2013 at 5:32 PM  

Repeating the same "bullshit" stories again and again on the stages.Bunch of liers always tell bunch of lies.
While looking at their past political history,we haven`t received
anything politically,economically and socially through them.They make symbolic speeches which captivate the minds of the people and remain in their seats.

Anonymous ,  May 16, 2013 at 6:59 AM  

It is an unanswered question how the late Mr.S J V being described as the father of the tamil nation...? What he had achieved during his political career,politically economically or socially on behalf of the tamil nation..? He made pacts formel agreements with Late Mr.SWRD and then With late Mr.Dudley Senanayake.But what happened? nothing happened.As a result unusual developments of hatred,anger,differences of opinion
among the races,discrimination,race riots etc etc and still the societies suffer.It hasn`t come to a successful end.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com