Tuesday, May 28, 2013

M15 மற்றும் வுல்விச் கொலைகாரர்கள். By Chris Marsden and Julie Hyland

பிபிசி தலைமையகத்தில் அபு நுசய்பாவை கைது செய்த அசாதாரண முடிவு, பிரித்தானிய உளவுத்துறை அமைப்புக்களான M15ம் சிறப்புப் பிரிவும் மைக்கேல் அடெபோலஜோ மற்றும் மைக்கேல் அடெபோவேலைக் குறித்து ஒப்புக் கொண்டுள்ளதைத் தவிர அதிகம் அறிந்துள்ளன என்பதை தெரிவிக்கின்றன. அவர்கள்தான் ட்ரம் வாசிக்கும் லீ ரிக்பியை கொன்றவர்கள்.

தென்கிழக்கு லண்டனில் புதன் அன்று வுல்விச் தெருக்களில் ரிக்பி வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடைய கொலைகாரர்கள் வீடியோவில், இது ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரித்தானியாவின் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் கொலை என்று கூறினர்.

இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்து 24 மணி நேரத்திற்குள் அடெபோலஜோ M15 க்கு தெரிந்தவர், எட்டு ஆண்டுகளாக கண்காணிப்பில் உள்ளார் என்பது தெளிவாயிற்று. அதற்குப் பின் அடெபோவலேயும் பாதுகாப்புப் பிரிவினருக்கு நன்கு தெரிந்தவர் என்பது வெளிப்படையாயிற்று.

பிபிசியில் கைது என்பது நியூஸ்நைட் நிகழ்ச்சியின் முக்கிய பேட்டியை தொடர்ந்து வந்தது; இதில் நுசய்பா தன்னுடைய நெருக்கமான நண்பரான அடெபோலஜோவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சற்று விளக்கி ரிக்பி மீதான கொடூரத் தாக்குதலுக்கு இருந்திருக்கக்கூடிய உந்துதல் பற்றி விவரித்தார்.

பேட்டியின்போது அவர் அடெல்போலஜோ சமீப மாதங்களில் பலமுறை M15 ஆல் அணுகப்பட்டார் என்றும் தகவல் கொடுக்குமாறு கோரப்பட்டார் என்றும் தெரியப்படுத்தினார். நுசய்பா நிலையத்தை விட்டு நீங்கியதும் கைது செய்யப்பட்டார்—இது தொடர்பற்ற விவகாரம் ஒன்றை அடுத்து.

உண்மையில் நுசய்பாவின் பேட்டி மற்றும் இரு கொலைகாரர்களைப் பற்றி தெரியவந்துள்ள உண்மைகள், செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஊயரடுக்கின் கூற்றுக்களான கொலைகார நடவடிக்கைகள் எதிர்பார்த்திருக்கப்படமுடியாது இதற்கு விளக்கம் இல்லை என்பதை மறுக்கின்றன. இருவருடைய தனி வாழ்க்கை வரலாறுகளும் அதிருப்தி அடைந்த இளைஞர்களின் அடுக்கு முகப்புடன் பொருந்தியுள்ளன; இவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடையாளத்திற்கு ஆதாரம் எனக் கண்டு ஈர்க்கப்பட்டனர், அது ஒரு சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு எனக் கருதினர்—வேறு எந்த வெகுஜனத் தளம் உடைய முன்னேற்ற மாற்றீடு இல்லாத நிலையில்.

எப்படிப் பார்த்தாலும் அடெபோலஜோவும் அடெபோவலேயும் நைஜீரிய வம்சாவளியை கொண்டிருந்த லண்டன் இளைஞர்கள், கிறிஸ்துவப் பின்னணியில் இருந்தவர்கள்; சிறு பிராயத்திலேயே அற்ப குற்றங்களில் ஈடுபட்டவர்கள். 2003ம் ஆண்டு 19வயதான அடெபோலஜோ இஸ்லாமிற்கு மதம் மாறினார், ஜிஹாத்திற்கு வாதிடும் குழுக்களில் தொடர்பு கொண்டார்.

அதே ஆண்டில் பொய்கள், தவறான கருத்துக்களின் அடித்தளத்தில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் தங்கள் குற்றம் சார்ந்த படையெடுப்பு, ஆக்கிரமிப்பை ஈராக் மீது தொடங்கின; இதைத் தொடந்து “பயங்கரவாதத்தின் மீதான” போர் என்பது உள்நாட்டிலும் தொடர்ந்தது, ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

அடெபோவலே இஸ்லாமிற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு மாறியதாகத் தெரிகிறது; அப்பொழுது 17 வயதான அவர், ஒரு இனவெறி உந்துதல் தாக்குதலை தொடர்ந்து மதம் மாறினார். அதில் ஒருவர் கொல்லப்பட்டார்; இவர் பலமுறை குத்தப்பட்டார். மனநிலை சரியாக இல்லாததாக்கியவர் அவரால் பாதிக்கப்பட்டவர்களை அல் குவேடா உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி, வெடிகுண்டுகள் போடச் சதி செய்பவர்கள் என்றும் கூறினார்.

மதம்மாறிய காலத்தில் இருந்தே அடெபோலஜோ பாதுகாப்புப் பிரிவுகளின் கண்காணிப்பின்கீழ் உள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் பல பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளில் இருந்தார் எனக் கூறப்படுகிறது; ஆனால் உத்தியோகபூர்வ கூற்றுக்களின்படி, நிகழ்விற்குச் சற்று தொலைவில் இருந்தவராகத்தான் கருதப்பட்டார்.

இவர் சோமாலியாவிற்கு பயணிக்க முயன்றார் எனக் கூறப்படுகிறது; இது “தோள்பட்டையின்மீது” ஒரு தட்டினால் நிறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் நுசய்பா கருத்துப்படி அடெல்போலஜோ சோமாலியாவின் எல்லையில் இருக்கும் கென்யாவிற்கு சென்றிருந்தார், அங்கு அவர் கென்ய இராணுவத்தால் 2010ல் கைது செய்யப்பட்டார். அல் குவேடா சோமாலியில் நடத்த இருந்த குண்டு வெடிப்பில் சேர முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இவர், நாட்டை விட்டு அகற்றப்படுமுன் சித்திரவதைக்கு உட்பட்டார். (கென்ய அதிகாரிகள் இப்பொழுது அவர் கைது செய்யப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.)

இன்னும் பரபரப்பான தன்மையில் நுசய்பா நியூஸ்நைட்டிடம் நாடுகடத்தப்பட்ட பின்தான் M15 அவரை தகவல் கொடுக்குமாறு அணுகியது. பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அடெல்போலஜோவிடம் பேசினர்; அவர்களே M15 ஆல் தகவல் கொடுப்பதற்கும் பல குழுக்களில் ஊடுருவவும் தொந்திரவு கொடுக்கப்பட்டனர்.

அடெபோவலே பொலிசால் இரண்டு மாதங்களுக்கு முன்பு காவலில் வைக்கப்பட்டதும் இப்பொழுது உறுதியாகியுள்ளது—எதற்காக, இத்தனை நாட்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

இது ஒரு வடிவமைப்பைத்தான் தெரிவிக்கிறது.

பல ஆண்டுகளாக செய்தி ஊடகம் கடமையுடன் உத்தியோகபூர்வ பிரச்சாரமான பயங்கரவாதத்தின் முக்கிய ஆபத்து “தூய தோல்கள்” என்போரால் வருகிறது— தீவிர “தனி ஓநாய்களால்” பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரியாதவர்களால். உண்மையில், ஒவ்வொரு உண்மையான பயங்கரவாத நிகழ்வும் ஒவ்வொரு முக்கியமான கைதும், பயங்கரவாத சதிகளும், M15 க்கு நன்கு அறிந்தவர்கள்தான் தொடர்பு கொண்டிருந்தனர்.

உதாரணமாக, ஜூலை 7, 2005 லண்டன் தற்கொலைத் தாக்குதல்களில் மகம்மது சித்திக் கான் மற்றும் ஷஹீஸட் தன்வீரும் உளவுத்துறைக்கு நன்கு தெரிந்தவர்கள், தங்கள் தாக்குதலை அவர்கள் நடத்துவதற்கு ஐந்து மாதம் முன்னதாகவே கண்காணிப்பில் இருந்தவர்கள்தான்.

சில நிகழ்வுகளில் வலுவான சான்றுகள், M15 பயங்கரவாத திட்டங்களை அறிந்திருந்தனர், ஊக்கம் கொடுத்தனர் என்று கூட வெளிப்பட்டுள்ளன; இதில் 2007 உரப் பிரிவுச் சதித்திட்டமும் அடங்கும்.

M15 மேற்கொண்டுள்ள அணுகுமுறை ஒரு கூடுதலான விளக்கத்தையும் கொண்டுள்ளது. உத்தியோகபூர்வ வனப்புரையான “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதின் பின்னணியில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நெருக்கமாக அல்குவேடா வகைக் குழுக்களுடன் லிபியாவிலும் மாலியிலும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர நெருக்கமாக செயல்பட்டுள்ளன. இதைத்தான் அவை இப்பொழுது சிரியாவிலும் செய்கின்றன; அங்கு பிரித்தானியா, அசாத் ஆட்சிக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் இஸ்லாமியவாத ஆதிக்க அமைப்புக்களுக்கு உத்தியோகபூர்வமாக ஆயுதங்கள் வழங்க ஒரு சர்வதேசப் பிரச்சாரத்தை நடத்திவருகிறது.

ரிக்பீ மீதான மிருகத்தனத் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புதான், அடெபோலஜோ வுல்விச் தெருக்களில் வெளியே வந்து பகிரங்கமாக இளம் முஸ்லிம்கள் சிரியாவிற்குச் சென்று மேற்கத்தைய ஆதரவுடைய எதிர்தரப்புச் சக்திகளுடன் இணைந்து போரிட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் சிரியாவில் போராடும் 500 ஐரோப்பியர்களில் குறைந்தப்பட்டசம் 100 பேராவது லண்டனில் இருந்து வந்தவர்கள் என்றார்.
இதன் உட்குறிப்புக்கள் தெளிவு. சிரியாவில் கொலைகளுக்கு வலியுறுத்துதல் மற்றும் அத்தகைய செயல்களை பிரித்தானியாவில் செய்வதற்கும் இடையே சீனச் சுவர் ஒன்றும் குறுக்கே இல்லை. இம்மாதம் முன்னதாக, YouTube காட்சிகள் ஜிஹாதிய பாரூக் பிரிகேட் தலைவர், கலிட் அல் ஹமத் ஒரு சிரிய அரசாங்க சிப்பாயின் இதயம், நுரையீரல்களை வெட்டுவதைக் காட்டியது; அதே நேரத்தில் அவர் “எமது கோஷம், கண் பலிக்கு கண், பல்லுக்குப் பல்” என்றார்.

இதே சொற்கள்தான் லீ ரிக்பியை செயலற்றவராக்கும் முயற்சியை நியாயப்படுத்த அடெபோலஜோ புகைப்படக் கருவிக்கு முன் கூறியதும் ஆகும்.
கடமை நேரத்தில் இல்லாத ஒரு இளம் சிப்பாயை கொலை செய்வதை எதுவும் நியாயப்படுத்தாது. ஆனால் விமர்சகர்கள் இக்கொடூர நிகழ்விற்கு விளக்கம் நாட வேண்டும் என வலியுறுத்துவது இழிந்த, சுயதேவையுடையது ஆகும்; இது ஒருவகையில் விருப்பத்தையும் ஒரு மன்னிப்பு அளிப்படையும்கூடக் காட்டுகிறது. இன்னும் அதிக கொடூரங்களுக்கு இது வழிவகுக்கிறது.

வுல்விச் கொலை பல ஒன்றோடொன்று தொடர்புடைய காரணிகளின் பிணைப்புடைய விளைவு ஆகும்—உலகெங்கிலும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் நடத்தும் குற்றங்களுக்கு நோக்குநிலை தவறிய தனிநபர்களின் விடையிறுப்பு ஆகும். இழிந்த சமூகச் சூழல் இத்தகைய அதிருப்தியையும் ஆழ்ந்த விரோதப் போக்கையும் வளர்க்கிறது. இதைத்தவிர பொதுவாக அழுகிய உத்தியோகபூர்வ அரசியலும் வெகுஜன ஊடகமும் இதற்குக் காரணம் ஆகும்; அவை பிரித்தானியா ஒரு கொள்ளை முறைப் போரில் இருந்து மற்றொன்றில் பங்கு பெறுவதற்கு வாதிடுபவையாக உள்ளன.
இந்த நச்சுக் கலவைக்குள் பாதுகாப்புப் பிரிவினரின் முயற்சிகளான இந்நிலையினால் பாதிக்கப்பட்டவர்களை தேடிக் கண்டுபிடித்து தம் நோக்கத்திற்கு அவர்களைப் பயன்படுத்தும் செயல் உள்ளது.




No comments:

Post a Comment