பெட்ரிக் அமைப்பு நாட்டிற்குள் எல்லை மீறி செயற்ப்பட்டுள்ளதா? தெல்கொடவிடம் CID விசாரணை
பெட்ரிக் நியூமான் அமைப்பு நாட்டிற்குள் எல்லை மீறி செயற்ப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இரகசிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக அமைப்பின் இலங்கை பிரதிநிதி சாகரிகா தெல்கொடவிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடாத்தியுள்ளதாகவும், அவரிடமிருந்து பெட்ரிக் நியூமான் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அரச சார்பற்ற நிறுவனமான பெட்ரிக் நியூமான் அமைப்பின் செயற்பாடுகளை சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைபு செய்தி வெளியிட்டிருந்தது இதற்கிணங்க இரகசிய பொலிசார் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேநை ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்களை கைதுசெய்யவே பெட்ரிக் நியூமான் அமைப்பு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் குறித்த செய்திகள் அடிப்படையற்றவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment