விமானத்தை சுட்டுவீழ்த்திய இரு புலிகளுக்கு எதிராக வழக்கு - உபாலி ஆனந்த
அன்ரோனேவ் விமானத்தை சுட்டுவீழ்த்திய புலிப்பயங்கரவாதிகள் இருவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அன்ரோனோவ்-32 விமானத்தை சுட்டு வீழ்த்தி அதிலிருந்த ரஷ்ய விமானி, விமான உதவியாளர்கள் இருவர் மற்றும் 29 படைவீரர்கள் இறப்பதற்கு இவ்விருவரும் காரணமாக இருந்தனர் என்றும் அவ்விருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அன்ரோனோவ்-32 எனும் விமானம் தலாவ எனுமிடத்திலுள்ள கிரிவௌவுக்கு மேலாக பறந்துக்கொண்டிருந்த போதே ஏவுகணையினால் தாக்கப்பட்டமையினால் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த சம்பவம் தொடர்பில் புலிகள் அமைப்பைச்சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ராசதுரை ஜெகன்,நல்லான் சிவலிங்கம் ஆகிய இருவர் மீதே அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
இந்த சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை கருவியை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள தாக பயங்கரவாரத புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment