Thursday, May 2, 2013

அசாத் சாலி கைது.

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த சூழ்ச்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவையிலுள்ள அசாத் சாலியின் புதல்வியின் வீட்டில் வைத்து அவர் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குற்றத்தடுப்பு திணைக்களத்திற்கு அசாத் சாலி தொடர்பில் பல்வேறு முறைபாடுகள் கிடைத்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வெளிவரும் ஜுனியர் விகடன் சஞ்சிகைக்கு அண்iமையில் இவர் வழங்கிய செவ்வியில் பயங்கரவாத இயக்கத்திற்கு தலைமைத்துவம் கொடுப்பது தொடர்பான தகவல்கள் வெளிவந்தன. இவரது இச்செவ்வியின் மூலம் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் பெரும் அசசுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் பயங்கரவாதம் ஏற்பட்டது போன்று முஸ்லிம் பயங்கரவாத ஆயுத போராட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும் என ஜுனியர் விகடனுக்கு தெரிவித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதத்தை ஏந்த வேண்டியது இப்போது மேற்கொள்ள வேண்டிய தேவை எனவும் அவர் அவ் செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கையில் அது போன்ற போராட்டத்துக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும். இஸ்லாமிய ஆயுத குழுவொன்றுக்கு அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுவதற்காக தான் ஆதரவளிக்க போவதாகவும் அவர் ஜுனியர் விகடன் சஞ்சிகைக்கு தெரிவத்துள்ளார்.

அவரது இந்த கருத்து நேரடியாக பயங்கரவாதத்துக்கு உந்து சக்தியளிக்கும் செயல் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் அரசியல் யாப்பின் பிரகாரம் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், அறிக்கை வெளியிடுதல், ஆதரவளித்தல், பயங்கராவாத இயக்கத்தின் சார்பில் செயற்படுதல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும் இலங்கை பிரஜi என்றவகையிலர் அசாத் சாலி இலங்கையின் சட்டங்களை மீறியுள்ளார் என பாதுகாப்பு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com