Thursday, May 30, 2013

நாட்டில் அதிகூடிய குளங்களை அமைத்தவர் ஜே.ஆர்! - ரணில்

இலங்கையில் அதிகூடிய குளங்களைக் கட்டியெழுப்பியர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன என, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புத் திட்டம் பற்றி பொதுமக்களின் கருத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக புதியதொரு இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, ரணில் விக்கிரமசிங்க, தாதுசேன, மகாசேனன், பராக்கிரமபாகு ஆகிய மூவரும் ஒன்றிணைந்து கட்டிய குளங்களை விடவும், அதிகூடியளவு குளங்கள் ஜே.ஆர் நிர்மாணித்தார் எனக் குறிப்பிட்டார்.

மகாவலி போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டத்தைத் தொடங்குவதற்கான சக்தி நிறைவேற்றதிகாரமுடைய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருக்கு இருந்ததென்பதை ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டினார்.

1978 இல் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஆரம்பித்து அரசாங்கத்தின் தலைமை, நிறைவேற்றதிகாரத்தின் தலைமை, அரசாங்கத்தின் தலைமை ஆகிய மூன்று அதிகாரங்களையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியில் பாரியதொரு முன்னேற்றத்தைக் காண்பதற்குத் தேவையான சூழல் அன்று அமைந்திருந்தது.

அவ்வாறே, காலத்திற்குத் ஏற்றாற்போல சேவைபுரிந்து, நாட்டுக்குப் பொருத்தமான பிரதமரையும், நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதிமுறையையும் அறிமுகப்படுத்திய கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியையையே சொல்ல முடியும். எதிர்வரவுள்ள நாட்டின் அரசியலை மக்கள் விரும்பும் வண்ணம் மாற்றியமைப்பதற்கு ஆவன செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜயவர்த்தனவினால் தொடங்கப்பட்ட மக்களாட்சி காணாமற் போய், பல தசாப்தங்கள் ஆகின்றன என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதியும், நீதிமன்றமும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை பலம் குன்றச் செய்ததாகவும், பின்னர் பாராளுமன்றம் ஒன்றிணைந்து நீதிமன்றத்தை பலமில்லாமல் செய்தது என்பதையும் அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.

அதற்கேற்ப, நீதிமன்றம், பாராளுமன்றம், மனித உரிமைகள், வாக்களிக்கும் அதிகாரம் அனைத்தும் பலம் குன்றியிருப்பதாகவும் ஜனாதிபதி மாத்திரம் வெற்றிபெற்றுள்ளார் என்றும் மக்கள் தோல்வியைச் சந்தித்துள்ளார்கள் என்றும் விக்கிரமசிங்க தெளிவுறுத்தினார்.

(கேஎப்)

No comments:

Post a Comment