Monday, May 20, 2013

கருப்பான சருமத்தை இயற்கையாக மாற்றலாம் : கவலையை விடுங்கள்

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்…
முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.

தொடர்ந்து நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.

கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com