ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சிங்கள, முஸ்லிம், தமிழர்களிடையே இனவாதத்தைக் கிளப்பும் வேலையே செய்கின்றனர்!
சிங்கள, முஸ்லிம், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ உள்ளபோதும், அவரது அரசாங்கம் பிளவினை ஏற்படுத்தும் கைங்கரியத்தை மட்டுமே செய்கின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்துத் தெரிவித்துள்ள அஸாத் ஸாலி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன முதல் இதுவரை ஜனாதிபதிகளாக ஆட்சிபீடமேறிய ஜனாதிபதிக் குடும்பங்களை எடுத்து நோக்கினால், ஒரே குடும்பத்தில் மூவினங்களையும் பிரதிபலிக்கும் ஒரே ஜனாதிபதிக் குடும்பம் மகிந்தரினுடையது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கேற்ப, இந்த இனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தரத்தக்க ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷவே என்றும் அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், அந்த தலைவரும், அவரது குடும்ப அங்கத்தவர்களும் செய்வது என்னவென்றால், சிங்கள,முஸ்லிம் மற்றும் தமிழர்களிடையே இனவாதத்தைக் கட்டியெழுப்பும் வேலைகளே அவர்கள் செய்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment