Saturday, May 4, 2013

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு வரவேற்பு! பிரிவினையைத் தூண்டுவோருக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவர் பயங்கரவாதி என பச்சைகுத்தல்! - விலாவாரியாகச் சொல்கிறார் கரு ஜெயசூரிய

முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ஆஸாத் ஸாலி அவர்கள் கைது செய்யப்பட்டதை நேர் சிந்தனை உள்ள அனைவரும் மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டும். தீவிரவாத முன்தடைச் சட்டத்தின் மூலம் இன முரண்பாட்டை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள இவரது கைது, யுத்த கால சட்டங்களை யுத்தமற்ற காலப்பகுதியில் தமது அரசியல் எதிரிகளை வேட்டையாட இந்த அரசு பயன்படுத்தி வருவதை இன்னொருமுறை உறுதி செய்துள்ளது.

இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு பேணப்படும் நிலையின் அவலத்தை நோக்கும் ஒருவருக்கு ஆஸாத் சாலி அவர்களின் கைது ஒரு அதிர்ச்சியான சம்பவமாக இருக்க முடியாது. ஆஸாத் சாலி அவர்களின் நடவடிக்கைகள் ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் வெறுப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் இந்த நாடு எவ்வாறான பின்விளைவுகளை சந்திக்கும் என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாகவே நோக்கப்பட வேண்டும்.

இனவாத குழுக்கள் இந்த நாட்டின் சமூகமொன்றை இலக்குவைத்து வெறுப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கையில், இன்னொரு இன மோதலுக்கு தூபமிடப்படும் போது நாட்டின் அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இதற்கு எதிராக குரல் எழுப்பிய ஆஸாத் ஸாலி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர் ஆவார். இன வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாட்டின் ஒற்றுமைக்காகவும் நாம் ஆஸாத் ஸாலியுடன் கை கோர்க்க வேண்டும். எம்மில் அநேகமானோர் 1983 ஜூலை கலவரம் போன்ற ஒரு விடயத்தை மீண்டும் யாராவது கொண்டு வர முயன்றால் அதை எதிர்ப்போம். ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராக தேசப்பற்றுள்ள, இனவெறுப்பு பிரச்சாரங்களை எதிர்க்கின்ற, மதப்பிரிவினைகளை விரும்பாத அனைவரும் அணி திரள வேண்டும்.

ஒரு ஊடகத்துக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார் என்ற குற்றச்சாட்டில் ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, ஒரு ஆளும் கூட்டணி அரசின் தலைவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு ஆளும் கட்சி அரசியல்வாதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை மக்கள் இந்த முரண்பாட்டு சம்பவங்களை மற்றும் இவ்வாறு வெறுக்கத்தக்க வெட்கக்கேடான முறைமைகள் மூலம் அரசாள்பவர்களை அவதானித்து வருகிறார்கள்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பொலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதி மாளிகைக்கு கோலாகலமாக வரவேற்கப்படும் அதேவேளை, சமாதானத்தை வேண்டி, மக்களை பிரிவினைக்கு தூண்டுவோருக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவர் பயங்கரவாதி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இந்த வருட நவம்பரில் இலங்கையில் நடைபெற ஏற்பாடாகி இருக்கும் இந்த வேளையில், உலகின் முழுக்கவனமும் இலங்கை மீது திரும்பியுள்ளது. இந்த நிலையில் நமது அரசு பொதுநலவாய கொள்கைகளான நல்லாட்சி, கருத்தது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி என்பவற்றை உள்வாங்க எந்தவித அக்கறையும் காட்டாமை மிகவும் துக்ககரமானது. இலங்கையின் ஜனநாயகத்தை மேற்குலகம் குறை கூறி வரும் இவ்வேளை, தறபோதைய இலங்கை அரசின் நடவடிக்கைகள் எமது நாட்டின் கீர்த்திக்கு மேலும் சேறு பூசுவதாகவே அமைந்துள்ளது.

சுதந்திரத்தை விரும்பும் சகல இலங்கையரையும் இந்த அரசினால் மேற்கொள்ளப்படும் பாரிய அநீதிகளை உணர்ந்து கொள்ளுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். ஆஸாத் ஸாலிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஒரு தனி மனிதருக்கு இழைக்கப்பட்ட அநீதியல்ல. மாறாக இலங்கையர் அனைவரும் ஒன்றாக வாழ முடியும் என்ற நம்பிக்கைக்கு, இந்த நாட்டில் நீதி பேணப்படும் என்ற நம்பிக்கைக்கு, இலங்கை மீண்டும் ஒரு யுத்தத்துக்கு இன வெறுப்புக்கு உட்படக்கூடாது என்ற எதிர்பார்ப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்காக போராடுவது மிகவும் பெறுமதியானது.

7 comments:

  1. யாழ்பாணம் நூலகம் எரிக்கப்பட்டபோது, 83 இல் தமிழர் தெரிவில் தெரு நாய்களைப்போல் அடித்துக்கொல்லப்பட்டபோது கரு ஜெயசூரியா எங்கிருந்தவர். ஜேவிபி இளைஞர்களை களனி கங்கையில் வீசியபோது நாட்டில் எந்தச் சட்டம் இருந்தது.

    ஐக்கிய தேசியக் கட்சியின் சகல அராஜகங்களுக்கும் அசாத் சாலி பங்காளியாக இருந்ததால் இந்தக்கடுப்போ..

    ஆசாத் சாலியை கைது செய்தது மாத்திரமல்ல. தீவிரவாதத்தை தூண்டினார் என்பது நிருபிக்கப்பட்டால் இலங்கைச் சட்டம் மாத்திரம் அல்ல சரியா சட்டப்படி கழுத்தை அறுத்துக்கொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. தம்பி கரன் சொல்லுவதப்பார்தா பிரபாகரண்ட தலையை கோடலியால் கொத்தினது சரிதான் போல அஷாத் ஷாலி ஒன்றும் ஆயுதம் தூக்கல நினைவில் வைத்துக்கொள் தனிநாடும் கேட்கல

    ReplyDelete
  3. தம்பி கரன்
    மூத்திரம் கழுவாத நீ ஷரீயா சட்டம் பற்றி பேசுறாயா ?

    இந்த நாடு இந்த அளவுக்கு இரிகிரதுகு "பிபாகரன்" தான் காரணம் என்கிறத மறந்திடாத

    ReplyDelete
  4. மூத்திரம் கழுவினால் நாட்டை காட்டிக்கொடுக்கலாம், எட்டு பொண்டில் கட்டலாம் என்றெல்லாம் சொல்லுறயளா நானா..

    நாட்டுக்கு எதிரகா செயற்பட்டால் பிரபாகரனுக்கு வழங்கிய அதே தண்டனை அசாத் சாலிக்கும் வழங்கப்படவேண்டும.

    ReplyDelete
  5. Haran enru peyarai vaitthukkondaal veeram VARAATHU alivuthaan minjum PALLAAIRAKKANAKKIL KOLAI seitthavanukkum samookatthikku kural kodutthavanukkum ore TANDANAI YAA ?ITHUTHAAN p. Haranin theerppo? Vannikkullum ITHUTHAAN nadantthathu alinthum putthi VARAVILLAIYE !!!

    ReplyDelete
  6. இங்க பார்ரா கரனுக்கு இருக்கிற நாட்டு பற்ற?
    நாட்டை காட்டி கொடுத்தவனுக்கும்,நாட்டை கூறுபோட நினைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்த கரனின் அண்ணன் மாருக்கு பஞ்சுமெத்தை நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ண நினைக்கும் பேரினவாதிகளுக்காக குரல் கொடுத்தால் சிறைச்சாலை.
    என்ன ஒரு அறிவு.
    அது சரி ஏம்பா கரன் உன்னால் கருத்தை கருத்தால் வெல்ல முடியல்லேன்னா எதுக்காக இசுலாத்தை இதுக்குள் கொண்டு வந்து பூத்துகிறாய்.
    இசுலாம் எங்கு "எட்டு பொண்டில்" கட்ட சொல்லி இருக்கிறது? இசுலாத்த நன்கு படித்து விட்டு வந்து உளறு உன் உளறலை.

    ReplyDelete
  7. இந்த சோநிகளை சவூதிக்கு அடித்து ஓட ஓட கலைக்கணும் , அங்கு அவங்கள் இஸ்லாத்த்தோடவும் அல்லாவோடவும் நல்லா படுக்கட்டும், இங்கே இவங்களுக்கு என்ன வேலை , புலியிடம் இருந்து காப்பாற்றிய நாட்டை , இந்த முட்டாள் காட்டு மிராண்டி கற்கால சட்டத்தை போற்றும் கூட்டத்திடம் இழக்க கூடாது.

    ReplyDelete