Thursday, May 2, 2013

நாளை கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் காரணம் காட்டி, நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் தனிப்பட்ட ரீதியாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வுத்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், நீதி வேண்டியும் நாளை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு தெமட்டகஹ பள்ளிவாசலிலிருந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த பெருந்திரளான அஸாத் ஸாலி ஆதரவாளர்கள் உத்தேசித்துள்ளனர்.

முஸ்லிம்களுக்காக அஷ்ரபின் பின்னர் ஒலித்த ஒரே குரல் அஸாத் ஸாலியினுடையது என்றும், அவரைக் கைது செய்வதில் வாய்புதைத்திருந்த அரசியலாளர்க்கு தொடர்பு இருக்கலாம் எனவும், அஸாத் ஸாலியின் குரல் ஓய்ந்தால் நிச்சயம் முஸ்லிம்களின் முதுகெலும்பு நிமிர மாட்டாது எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.

இது இவ்வாறிருக்க,

கைதுசெய்யப்பட்டுள்ள அஸாத் ஸாலி தன்னை விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக அவரது மருமகனிடம் குறிப்பிட்டுள்ளார். தான் அநியாயமான முறையில், தக்க ஆதாரங்கள் ஏதுமின்றிக் கைது செய்யப்பட்டதாகவும், அவ்வாறு கைதுசெய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை விடுதலை செய்யும்வரை ஒருதுளி தண்ணீரோ, ஒரு கவளம் உணவோ உட்கொள்ளப்போவதில்லையென்றும் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comment:

  1. trouble maker all out side living free.but peace maker in side the jail.good justice
    m.mazoomy

    ReplyDelete