Wednesday, May 22, 2013

இலங்கை தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் - இந்திய மத்திய அமைச்சர்!

இலங்கை தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக இந்திய மத்திய அமைச்சர் வீ.நாராணயசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் நலன்தொடர்பில் காங்கிரஸ் கட்சி மாத்திரமே உண்மையான அக்கறையுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கை தமிழர்களின் நலனுக்காக எவ்வித உதவியும் செய்யாதவர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவது வேடிக்கையானது என இந்திய மத்திய அமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனினும் காங்கிரஸ் கட்சி மாத்திரமே தமிழர்களின் நலன்கருதி செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு சொந்தமான கச்சதீவு பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட முடியாது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்காக ரோந்து கப்பலொன்று இந்திய கடலோர காவல் படையும் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கப்பல் கச்சதீவு உட்பட இலங்கைக்கு சொந்தமான கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட முடியாது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

3 comments :

Anonymous ,  May 22, 2013 at 9:15 PM  

Hon Minister Mr.Narayanasamy`s comments in regard to TN politicians and cinema politicians are very much appreciated.Tamil Nadu has its own seriousdifficulties,financially,economically and socially.This is crystal clear,but they are shedding crocodile tears on bahalf of the Srilankan tamils is something silly and ridiculous and not worth taking seriously.Kachchativu officially belongs to Srilanka and the comments made on beahlf of Kachchaitive and its sorroundings are reasonable.Thank you Hon.Minister Mr.Narayanasamy for your best comments.

Anonymous ,  May 23, 2013 at 7:06 AM  

He is 100% right.
TN political jokers want to create something for cheating and survival.

Anonymous ,  May 23, 2013 at 12:08 PM  

The political propaganda unit of TN
against the neighbouring country Srilanka being paid well for their
propaganda services in pounds dollars and €uros.Ones this pumping is stopped,everything will come to a dramtic end.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com