முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் நோக்கியா நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பில் உருவான Lumia 925 Catwalk எனும் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளது.மே மாதம் 14ம் திகதி லண்டனில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இக்கைப்பேசியானது 1280 x 768 Pixel Resolution, 4.5 அங்குல அளவுடைய OLED தொடுதிரையினை உள்ளடக்கியதாகவும், 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Qualcomm Snapdragon S4 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்தாகவும் காணப்படுகின்றது.
மேலும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவினை கொண்டுள்ள இக்கைப்பேசியில் 8.7 மெகாபிக்சல்கள் உடைய கமெராவும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment