Wednesday, May 1, 2013

சந்திரிக்கா நித்திரையில் இருந்து எழுந்தவர் போலவும், பொன்சேகா சந்தையில் விற்பனையாகாத அழுகிய பொருளாகவும் மாறியுள்ளனர்

அன்று சந்திரிக்காவால் செய்ய முடியாத அபிவிருத்தி பணிகளை தற்பொழுது ஜனாதிபதி மகிந்த செய்யும் போது, சந்திரிக்காவுக்கு பொறுத்து கொள்ள முடியவில்லை. சந்திரிக்கா நித்திரையில் இருந்து எழுந்தவர் போல் சத்தம் போடுகின்றார். பொன்சேக்கா சந்தையில் விற்பனை செய்ய முடியாத அழுகிய பொருளாக மாறியுள்ளார் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தற்போது மேடைகளில் ஏறி, நாட்டில் தற்போது தலைவர் இல்லை நாடு அழிவை நோக்கி சென்றுள்ளது, நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனக் கூறுகின்றார். 11 வருடங்கள் ஆட்சியில் இருந்து செய்ய முடியாததை செய்ய போவதாக இன்று பேசுகிறார். இது நித்திரையில் இருந்து எழுந்தது போன்ற வேலையாகும். அண்மையில் மத்துகம பிரதேசத்தில் அடிக்கல் நாட்டு விழா ஒன்று வந்தார். அர்ஜூன போன்ற மூழ்கும் கப்பலுடன் அவர் அங்கு வந்திருந்தார் எனவும் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின்சார கட்டணங்கள் குறித்து மங்கள சமரவீர பெரிதாக சத்தம் போடுகிறார். அமைச்சர்கள் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தினாலும், செலுத்த வேண்டிய இரண்டாயிரம் ரூபாவைக் கூட அவர் செலுத்தியிருக்க மாட்டார் எனவும் அமைச்சர் அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

களுத்துறை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment