கூகுள் மூலம் பணத்தையும் அனுப்பும் வசதி!
சான்பிரான்சிஸ்கோவில் நடந்த ஐ.ஓ. கருத்தரங்கில் இதுதொடர்பான விவரங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது. முதல்கட்டமாக அமெரிக்காவில் இச்சேவை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், விரைவில் உலகம் முழுவதும் இச்சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணம் அனுப்ப விரும்புபவர்கள், கூகுள் இணையதளத்துடன் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கை இணைத்து கொள்ளலாம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் பணத்தை அனுப்பலாம். இதற்கு சேவை கட்டணமாக 2.9 சதவீதம் வசூலிக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறோமோ அவருக்கு இமெயில் கடிதம் எழுதி, அதை பேப்பர் கிளிப் குறியுடனும், டாலர் குறியுடனும் இணைக்க வேண்டும். பின்னர் எவ்வளவு தொகையை அனுப்ப விரும்புகிறோம் என்பதை குறிப்பிட்டு Sent பட்டனை தட்டினால் அடுத்த முனைக்கு பணம் சென்று சேர்ந்து விடும்.
இந்த சேவையில் பணம் பெறுபவர்கள் கூகுள் மெயிலில் கணக்கு வைத்திருக்காவிட்டால், குறைந்தபட்சம் கூகுள் வாலட்டில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணத்தை பெற முடியும்.
0 comments :
Post a Comment