Friday, May 10, 2013

காதலர்களின் உல்லாச புரியாகும் கீரிமலை கடற்கரை.

காதல் ஜோடிகளின் உல்லாச புரியாக கீரிமலை கடற்கரை மாற்றம் பெற்று வருவதாக பல் வேறு தரப்பினரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். இறந்தவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடத்தப்படும் இந்த கடற்கரையோரம், இளம் காதல் ஜோடிகளின் அநாகரிக நடவடிக்கையானது பல்வேறு தரப்பினரையும் முகம் சுழிக்க வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிதிர்க்கடன் நிறை வேற்றப்படும் கடற்கரையோரத்தில் 4 ஜோடிகள் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமை அவதானிக்கப்பட்டு அங்கிருந்தவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.

இதேவேளை புனித இடமான கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் பொலிஸ் நிலைய மொன்று உள்ளபோதிலும் அருகிலுள்ள கடற்கரையில் காதல் ஜோடிகளின் அநாகரிக செயற்பாடு இடம்பெறுவதனை கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கப் படுவதில்லையெனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.

1 comments :

Anonymous ,  May 11, 2013 at 12:49 PM  

The atmosphere makes the young couples to behave in this indecent way.The moderntechniques,facilities
circumstances sexual exposure of the present cinemas,dramas,magazines compell them to lead indecent way of life.Even the money is just floating into their hands very freely.They even have chances to listen to the lives of foreign coutries youngsters.
The society is compelled to do a good sacrificing service to the younger society to bring them back to the track.It may be a holy place or not decency is very essential in all the places.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com