Friday, May 17, 2013

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும் - எச்சரிக்கை சுவரொட்டிகள்!

வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்று வியாழக்கழமை இரவு முதல் மீண்டும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு நகரின் ஹோட்டகளிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார விடுதிகளிலும் பாதுகாப்புடன் பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீதியோரத்தில் நின்றபடி விபசாரத்திற்காக ஆண்களை அழைக்கும்; பெண்களுக்கு இந்த எச்சரிக்கையானது அவர்களை பெரிதும் அச்சம் கொள்ளச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை அசிட் ஆகும் போன்ற வாசகங்கள் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இனந்தெரியாத நபர்களால் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.

4 comments :

ஆர்யா ,  May 18, 2013 at 1:13 AM  

அப்ப அவர்களுடன் போகும் ஆண்களுக்கு என்ன தண்டனை ? சிந்தித்து பார்த்தல் ஓன்று புரிகின்றது ,
நீர்கொழும்பு நகரின் ஹோட்டகளிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார விடுதிகலுக்கு போவோரே இதை செய்திருக்க வேண்டும் , ஜேசுநாதர் கல் எறிந்தவர்களை பார்த்து கேட்ட கேள்வியை தான் இவர்களிடம் கேட்க வேண்டும்.

Anonymous ,  May 18, 2013 at 6:12 AM  

No woman will enter into prostitution on her own accord.She is being pushedinto prostitution by some undesirable elements,secondly poverty is the main reason for prostitution.This should be wiped outMen are behind the these ill fame houses.The women should be taken to rehabilitation centres,once they recovered jobs should be provided to them to start a new life.Men who are behind these ugly scenes must go behind the bars.Throwing acid on these women is something brutlal and inhuman.Religious genius can play a good role in this matter.

Anonymous ,  May 18, 2013 at 9:30 AM  

Bible says "No man should sit upon judgement or another lest to be judged"
The Government and the religious leaders are holding responsiblity to take preventive measures and make a
good atmosphere,not only in Negombo
around Srilanka.

Throwing acid is a dangerous criminal act,Those who involved in pasting this type of notices to be taken into the dock.

ஈய ஈழ தேசியம் ,  May 18, 2013 at 11:50 AM  

இந்த அசிட் வீச்சுகாரர்களை தூக்கில் போட வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com