Tuesday, May 7, 2013

லெபனானுக்குச் சென்ற இலங்கைப் பணிப்பெண்ணின் தலை விமான நிலையத்துக்கு அனுப்பிவைப்பு...

வீட்டுப் பணிப்பெண்ணாக லெபனானுக்குப் பணிபுரியச் சென்றிருந்தபோது, கைகள், கால்கள், தலை, உடலின் மற்றைய பாகங்கள் அமானுஷ்ய முறையில் வெட்டப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருத்தியின் உடம்பு நேற்று முன்தினம் (05) கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள அந்தப் பெண்மணியின் உடற்பாகங்களை பரீட்சித்த நீர்கொழும்பு துரித மரண பரிசோதகர் வைத்தியகீர்த்தி ஸ்ரீஜயந்த விக்கிரமரத்ன, கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை வெகுவிரைவில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வரச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸாரிடம் நேற்று (6) கட்டளையிட்டுள்ளார்.

இவ்வாறு அமானுஷ்ய முறையில் கொலைசெய்யப்பட்டிருப்பது, மஹவெவ வடக்கு தொடுவாவில் வாழ்ந்துவந்த டிலிக்கா மதுஷானி (32) எனும் திருமணமாகாத பெண்ணாவார். இதற்கு முன்னர் பலதடவைகள் இந்தப் பெண்மணி வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் போய்வந்திருக்கின்றார். அவர் தனியாக அறை எடுத்து அவ்வறையிலேயே தங்கியிருக்கின்றார். அவர், ஒரு வீட்டிலன்றி பல வீடுகளிலும் பணிபுரிந்து வந்திருக்கின்றார்.

அவரின் அறையில் அவருக்குத் துணையாக ஹலாவத்தை பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த அநுஷா என்ற பெயருடையை பெண்மணியும் இருந்திருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து டிலிக்கா மதுஷானி அந்த அறையிலிருந்து காணாமற் போயுள்ளார் என அநுஷா என்பவர் லெபனான் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர், டிலிக்கா மதுஷானியின் உடற்பாகங்கள் குப்பைத் தொட்டியொன்றிலிருந்து பொலிஸாரினால் (26) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட உடம்பு பகுதிகளாகவே இருந்திருக்கின்றன. அதன்பின்னர், (5) கொலை செய்யப்பட்ட பெண்மணியின் தலைப்பகுதி மாத்திரமே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

3 comments :

Anonymous ,  May 8, 2013 at 6:02 AM  

It is really sorrowful to hear,women need a kind of courage to survive,but it is not advisable to go to an unknown country or place and lead a challenging life with ferocious beasts, monsters and draculas.Let it be a lesson for the other women whom they try for a very challenging and dangerous jobs in unknown places or countries.Why not the government advise these women to give up their dangerous ideas.

Anonymous ,  May 8, 2013 at 12:20 PM  

It is really a schoking experience for us why our Government doesn`t care about the plight of our own citizens in the middle east countries.Why the government turn a blind eye to this matter,even the opposition is compelled to find a solution for these pathetic and sorrowful stories.The government is answerable to every citizens of the country whether they are poor or rich.Why not you provide jobs for the poor women society rather than sending them abroad for slaughter , done by the hands of middle east butchers.

ARYA ,  May 14, 2013 at 1:31 AM  

இந்த செய்தியை வாசியிங்கள்,
அங்கு வீட்டு வேலைக்கு இரண்டு இளம் பெண்களை அமர்த்தி அவர்களோடும் உறவு கொண்டிருந்தார்.

பின்னர் அந்த வீட்டு வேலைக்காரிகள் மூலமாக பத்து வயதுச் சிறுமிகளை அழைத்து வரச்செய்து அவர்களையும் பயன்படுத்திக் கொண்டார்.

சிறுமிகளை அழைத்து வந்த குற்றத்திற்காக வேலைக்காரிகள் இருவருக்கும் எட்டுமாத சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.

இந்த முதியவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு அறுபதினாயிரம் திர்ஹாக்கள்(ஏழாயிரம் டொலர்) தரும்படி அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது நடந்த மொரோக்கோ என்ற முஸ்லிம் நாட்டில் , முஸ்லிம்கள் எப்படி கேவலமானவர்கள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com