Thursday, May 2, 2013

'கிராமோதயமே' 'தேசத்திற்கு மகுடமாக' மாறியிருக்கிறது....எல்லாமே பிரேமதாசவின் 'கொப்பி'கள்! - சஜித்

'ரணசிங்க பிரேதாச இன்று இருந்திருந்தால் பணத்தை நாட்டியாவது அவரது அரசாங்கம் மின்கட்டணத்தின் பாரத்தைத் தாங்கியிருக்கும்' என ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.

நேற்று (01) புதுக்கடையில் நடைபெற்ற காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 20 ஆவது நினைவு தினத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச,

'இன்று நாட்டில் இடம்பெறுவது கண்கட்டி வித்தைபோலும் அபிவிருத்தியேயாகும். பொதுமக்களின் வாய்க்கு, வயிற்றுக்கு, பைக்கு விளங்குவது போல ஆட்சி செய்ய இன்றைய அரசாங்கத்துக்குத் தெரியாது. அன்று எனது தந்தை ரணசிங்க பிரேதாச உருவாக்கிய கம்உதாவ (கிராமோதயம்) இன்று 'தேசத்திற்கு மகுடம்' என்ற பேரில் செயற்படுகின்றது.

அன்று கிராமோதயத்தின் இறுதியில் பொதுமக்களுக்கு இருப்பிடங்கள் கிடைத்தன. இன்று, தேசத்திற்கு மகுடம் எனும் 'கார்ட்போட்' கண்காட்சியின் இறுதியில் மீதமாவது வெற்று நிலம் மாத்திரமே! இன்று 'மக நெகும'கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம் எனும் பேரில் நடைமுறைப்படுத்தப்படுவது என்னவென்றால், பிரேமதாச அரசின் வீதி வாரமேயாகும். அன்று 1500 கிராமத் திட்டத்திற்குப் பதிலாக இன்று, 'திவி நெகும' எனும் குடும்ப பொரு ளாதார மேம்பாட்டுத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. அன்று எனது தந்தையினால் போயா தினங்களில் அலரி மாளிகையில் நடாத்தப்பட்ட தர்ம உபதேசங்களை அன்று இன்றைய ஆட்சியாள்கள் விரம்சித்தார்கள். ஆனால், இன்று அலரி மாளிகையில் அதிகமாக இடம்பெறுவது தர்மோபதேசங்களே! இவ்வாறு பார்க்கும் போது, தற்போதுள்ள அரசாங்கம் செயற்படுத்தும் ஒவ்வொரு விடயமும் பிரேமதாசவின் 'காபன் கொப்பி'களே!

எமது நாட்டிலுள்ள பெரும்பான்மைப் பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதென சர்வதேசத்தில் பேசப்படுகிறது. அந்த இடத்திற்கு இலங்கையை உருவாக்கியது யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அன்று பிரேமதாச அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கையில், தற்போது ஆட்சிபீடமேறியிருப்பவர்கள் 'கைப்பெட்டிகளில்' அவருக்கு எதிராக சாட்சியங்களை ஜெனீவாவுக்குக் கொண்டு சென்றார்கள். ஆயினும், எந்தவொரு பிரச்சினையுமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப பிரேதாசவினால் முடிந்தது. அன்றைய அந்த நிகழ்வுகளை எதிர்க்கட்சியாக நின்று நிந்தனை செய்யமுடியும். பழித்துரைக்க முடியும். ஆயினும் அவ்வாறு செய்ய மாட்டோம். அது நல்ல செயல் அல்ல. இன்று அரசாங்கம் எல்.எல்.ஆர்.ஸி அறிக்கையையும் மூடி மறைத்துள்ளது.

இன்று, மின்கட்டணத்தை அதிகரித்திருக்கிறார்கள். அந்தப் பாரத்தை இலங்கையிலுள்ள 200 இலட்சம் பொதுமக்களின் மேல் சுமத்தியிருக்கிறார்கள். இன்று ரணசிங்க பிரேமதாச இருந்திருந்தால் பணத்தை நாட்டியாவது அரசாங்கம் அந்தப் பாரத்தைப் பொறுப்பேற்றிருக்கும். இன்று எல்லாமே பொதுமக்களின் மேலே போடப்படுகிறது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 21 ஆவது நினைவு தினம் ஐ.தே.க. அரசாங்கம் அமைத்து கொண்டாடுவதற்கு எல்லோரும் உதவி ஒத்தாசை புரிய வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

1 comment:

  1. If so why the party hasn`t got a good impression by the people.

    ReplyDelete