Monday, May 20, 2013

ஏதாவது ஒரு தனியார் காரியாலயம் மூடப்பட்டால் பதவிதுறப்பாராம் பிரதியமைச்சர்!

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு அரசாங்க காரியாலயாலயமோ, அல்லது எதாவதொ தனியார் காரியாலமோ நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் கைத்தொழில் பிரதியமைச்சர் குணசேகர தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார். மேலும், சிறிய விடயங்களுக்கே எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம் இதுவும் அப்படியானதொரு தருணமாகும். ஒரு காரியாலயத்தையேனும் நாளை செவ்வாய்க்கிழமை மூடி காண்பிக்குமாறு நான் எதிரணிக்கு சவால் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோய் லால்காந்த தனது முகத்தில் ஒருமுறை கரியை பூசிக்கொண்டார். இம்முறை ரணிலும் லால் காந்தவும் இணைந்து தங்களுடைய முகங்களில் கரியை பூசிக்கொள்ள போகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment