Saturday, May 11, 2013

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால் யாழில் சேற்று நீர் விநியோகம்

யாழ். சுன்னாகம் கந்தரோடைப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையினால் குழாய் மூலம் வழங்கப்படும் நீர் பயன்படுத்த உகந்ததாக இல்லையென மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஒருவார காலமாக மிகவும் கலங்கிய நிலையில் சேற்று நீராக குழாய்மூலம் தண்ணீர் வருவதினால் குழாய் நீரைப் பயன்படுத்துகின்ற இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்துடன் குறிப்பிட்ட குழாய் நீர் பிரச்சனை சம்பந்தமாக உடுவில் பிரதேச செயலகத்தின் கவனத்திறக்கும் மற்றும் உடுவில் பிரதேச சபைக்கும் பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலகத்திலும் குழாய் நிர் பெறுவதில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவும் முறையிட்டுள்ளார்கள்.

கடந்த காலத்தில் சுன்னாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து இந்தப் பகுதிக்கான குழாய் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது எனினும் இந்த கியறுகளுக்குள் இந்தப்பகுதியில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையித்தில் இருந்து அகற்றப்பட்ட எண்ணெய் கலந்ததைத் தொடர்ந்து தற்போது ஊரெழு பொக்கனை பகுதியில் புதிய கிணறு அமைத்து குழாய் நீர் விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தண்ணீரும் குடிக்க உகந்ததாக இல்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

1 comments :

Anonymous ,  May 11, 2013 at 8:11 PM  

The Mps of Jaffna are very keen on their personal matters,whereas they represent the parliament for the public.It is their part of duty to look into the greivances of the people.They think it is the duty only to condemn the country`s Goverment and some of the local news papers too,but they don`t care of the need of the public and the grievances of the public.If they don`t care of our difficulties.We should realize there is no point of keeping them as our representatives.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com