Friday, May 3, 2013

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் சவுத்ரி சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் விசாரணையை முன்னெடுத்து வரும் அந்நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் சவுத்ரி சுல்பிகார் அலி இன்று இஸ்லாமாபாத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது சுல்பிகார் அலியின் மெய்ப்பாதுகாவலர் காயமடைந்துள்ளதுடன் அவரின் வாகனம் மோதியதால் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுல்பிகாரின் தலை, தோல் பட்டை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெனாசீர் பூட்டோ கொலை செய்யப்பட்ட போது முஷாரப் அந்நாட்டு ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். சரியான முறையில் பாதுகாப்பு வழங்காமையினாலேயே பெனாசீர் பூட்டோ கொலைசெய்யப்பட்டதாக முஷாரப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் முஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பி பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சவுத்ரி சுல்பிகார் அலி கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment