ஊழல் மோசடிகளுக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் மஹிந்தவே காரணம் - ரவி கருணாநாயக்க
நாட்டில் காணப்படுகின்ற ஊழல் மோசடிகளுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர்களும் ஜனாதிபதியுமே நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக பகிரங்கமாக கூறுகின்றனர். இந்நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள அரசு தான் தப்பித்துக் கொள்வதற்காக மக்ககள் மீது சுமைகளை சுமத்துவது முறையானதல்ல.
மின் கட்டண உயர்வு மற்றும் ஏனைய பொருட்களின் விலையேற்றத்தின் பின்னணியில் அரசின் ஊழல் மோசடிகளும் களியாட்ட செலவுகளுமே காணப்படுகின்றன.
போலியான தேசப்பற்றைக் காட்டி மக்களை ஏமாற்றிய காலம் இனியும் தொடரப்போவதில்லை. இதேவேளை, மக்கள் அரசுக்கெதிராக போராட ஆரம்பித்து விட்டனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
5 comments :
Corruption,nepotism,malpractices,
bribe, ego are born characters with us,until we change on our own,these characters control us for ever.
Religions and worthful preachings discipline,may bring atleast a little changes in our personal and public lives.Governments may come and go but a good harvest is not an easier one.
இவரு கோப் , சத்தோச எல்லாத்தையும் மொட்டை அடித்த காலம் போய் இப்ப வந்து மோசடி பற்றி வேறு பேசுறாறு.
காலம் என்றது பொல்லாதது. காலம் மாறும் போது சரித்திரமும் மாறும் என்று நினைக்காரு நம்பாளு
புலி பயங்கரவாதத்தை அழித்த மகிந்தவே இந்த நாட்டை ஆழ சரியானவர் , UNP வெகு விரைவில் அதிர்ந்தது அதன் கூட்டாளி புலி போல் ஆகிவிடும்.
Why not he repeat his past...!He can easily find the answer.
"Politicians blame each other for the country`s ill" but no politician
is perfect.except a very few.
The only leader Hon.Mr.Nelson Mandela is a living memory for the entire world.Let him be an exapmle for every politician around the world.
Post a Comment