நூற்றுக்கு நூறு வீதம் ஜனாதிபதியை முஸ்லிம் காங்கிரஸ் நம்புகின்றதாம் - நஷீர
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறாதென கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேற சதி முயற்சிகளை மேற்கொள்வோருக்கு உரிய நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாடம் புகட்டுமெனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மீது, நூற்றுக்கு நூறு வீத நம்பிக்கையை கொண்டுள்ளது என ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் இறுதிநேரம் வரை சிந்தித்து முடிவுகளை எடுக்கும் ஒரு கட்சியாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதாகவும், கட்சியின் பிரதித்தலைவர் ஆபிஸ் நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார் .
அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக போலிப்பிரச்சாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், தெரிவித்த அவர் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு நியாமும் இன்றி அரசாங்கத்திலிருந்து விலகாதெனவும், சுமூகமான அரசியல் நடைமுறையை முன்னெடுத்து செல்லவே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், அதன் பங்காளி கட்சியாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரியான ரீதியில் செயற்பட முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளதாகவும், ஆபிஸ் நஷீர் அஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.
1 comments :
பதவி, அந்தஸ்து, வருமானம், சொகுசான வாழ்வு, தன் குடும்பம் இதற்கு பின்னரே இனம், மதம், நண்பர்கள், மற்றையதெல்லாம். இப்போதைய ஹீரோ மகிந்தா பின்னர் வேறு ஒரு ஹீரோவுக்கு தொப்பியை மாற்றுவது இதுவே முதுகெலும்பு இல்லாத சுயநல முஸ்லிம் அரசியல் வாதிகளின் வழமையான செயல்பாடுகள். இதை புரிந்து கொள்ளாத முட்டாள் முஸ்லிம் மக்கள் இருக்க மட்டும் எதுவுமே மக்களுக்கு நடக்கப் போவதில்லை.
Al Hakeem
Post a Comment