Tuesday, May 7, 2013

வவுனியாவில் கேளிக்கை விடுதிகளாகும் தனியார் கல்வி நிலையங்கள்.

கடந்த மே தினம் அன்று வவுனியாவில் மேதின தரவுகளை திரட்டச் சென்றிருந்த எமது நிருபர் குழுவுக்கு வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்வி நிலையம் ஒன்று தொடர்பாக சில தகவல்கள் கிடைத்ததையடுத்து அவ்விடத்துக்கு விரைந்த எமது குழுவினர் அதிர்ச்சி ஊட்டும் தகவல்களையும், வருந்தத்தக்க விடயங்கள் சிலவற்றையும் அளித்துள்ளனர்.

இச் செய்தி தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு எதிராக எழுதப்படும் கட்டுரை அல்ல என்பதையும், பிரத்தியேக விடயங்களை சுட்டிக்காட்டும் செய்தி அல்ல என்பதையும் வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த மேதினம் அன்று வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் நடைபெறக்கூடாது என வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம் துண்டுப்பிரசுரம் ஒன்றின் மூலம் அறிவித்திருந்தது. ஆனால் அவற்றை மீறி கடைகள் திறக்கப்பட்டன. வுர்த்தக நிறுவனங்களில் வழமை போன்று வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவ் வேளை தனியார் கல்வி நிலையங்களும் இயங்கிக் கொண்டிருந்தது.

எமது செய்தித் தளத்தில் ஞாயிற்றுக் கிழமை தனியார் கல்வி நிலையங்கள் அரச அறிவிப்பை கருத்திற் கொள்ளாது வகுப்புகள் நடாத்துவது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த அநிவித்தல்களுக்கோ, அரச கட்டுப்பாடுகளுக்கோ சட்ட நடவடிக்கைகளையோ சிறுதும் சிறிதும் இலட்சியம் செய்யாமல் வவனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள சில கல்வி நிலையங்கள் தான்றோன்றித்தனமாக வகுப்புகளை இன்றும் நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள ஒக்ஸ்போட் கல்வி நிலையம் முதன்மை வகிக்கின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் பூட்டப்படாத அக் கல்வி நிலையம் மேதினம் அன்று பூட்டப்பட்டிருந்தது. அத்துடன் பூட்டப்பட்ட கல்வி நிலைத்திலிருந்து பாட்டு சத்தமும், பைலா அடிக்கும் சத்தமும் கேட்பதாக வைரவபுளியங்குளத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ரமேஸ் என்பவர் தெரிவித்தார்.

அதனையடுத்து எமது நிருபர் குழு அங்கு சென்று பார்த்த பொழுது, ஆசிரியர்கள் பலர் அங்கு மது போதையில் பாட்டு பாடி பைலா அடித்துக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பொலிஸில் அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட போதும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வவுனியாவில் உயர்தர வகுப்புகளுக்கு கல்வி கற்பித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர் என்றும், இந்த நிகழ்வு கல்வி நிலையத்துள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு வந்து திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்ட்டிகளில் கலந்து கொள்வதோ, மதுபோதையில் குறித்த ஆசிரியர்கள் மூழ்கியிருப்பதையோ எமது தளம் சுட்டிக்காட்டவில்லை. ஆனால் கல்விக்கு அதிபதியான சரஸ்வதிதேவியே உறையும் இடமாகத்தான் கல்வி கற்கும் இடங்கள் நோக்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரு கல்வி நிலைய நிர்வாகி தன் தல்வி நிலையத்தில் இத்தகைய நிகழ்வை அரங்கேற்றி இருப்பது வருந்தத் தக்க விடயமாக அமைந்துள்ளது.

அரச ஊழியர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்களின் பிள்ளைகள் இங்கு பெருமளவில் கல்வி கற்கின்றனர். அவர்கள் தம் கல்வியை உரிய இடத்தில் தொடர வேண்டும் என்பதையும், அவர்கள் எதிர் கால சிறந்த சந்ததியினராக வளர முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் எமது குழு அபிலாசைப்படுகின்றது.

இது பற்றி ஒக்ஸ்போட் கல்வி நிலைய இயக்குனர் திரு.கோபி மற்றும் காண்டீபனிடம்; கேட்ட போது 'எமது கல்வி நிலையத்தில் எது நடக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்' என்று தரக்குறைவாக பேசியுள்ளார்.

கல்விக் கழகமாக பேணப்பட வேண்டிய நிறுவனங்கள், முன்னோடியாக திகழ வேண்டிய நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக திகழ வேண்டிய நிறுவனங்கள், வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிறுவனங்கள் இத்தகைய கீழ்த்தரமான எல்லை வரை செல்வது அருவருக்கத்தக்க விடயமாகும். சமூகம் இதனை எவ்வாறு இனி பார்க்கப்போகின்றது???

இது போன்ற கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை அரச அதிபர் மற்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்காமல் பாரா முகமாக இருப்பது சமூகம் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துயள்ளது. இச் செய்திகளின் உண்மைத் தன்மைகளை அதிகாரிகள் கண்டறிந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தகுந்த நிறைவான கல்வியை பெற அரசு முன்வர வேண்டும்.





4 comments :

Anonymous ,  May 7, 2013 at 3:56 PM  

கல்விக் கூடங்கள் வெறும் வியாபார நோக்கத்தில், புத்தக கலவியையும், பரீட்சைகளுக்கான ஆயுத்தங்களையும் மட்டுமல்ல, ஒழுக்கம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் கொண்ட எதிர்கால பிரஜைகளை உருவாக்க செயல்பட வேண்டும். எம்மினம் இனியாவது திருந்துவார்களா?

Wannian

Anonymous ,  May 7, 2013 at 6:53 PM  

How this piggery society can lead the students.Parents and the society
have the duty to put an end to this nonsense.

Anonymous ,  May 11, 2013 at 2:23 PM  

very bad...

Anonymous ,  May 11, 2013 at 2:24 PM  

uneducated people are directors of tutorial centers they only know about money .

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com